பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96.

அவளுக்கு நினைவூட்டுவாயாக. நான் மணிபல்லவம் செல்கிறேன்' என அறிவித்துவிட்டு, ஆகாயத்தில் எழுந்து மறைத்துவிட்டது.

சுதமதி தனித்து விடப்பட்டாள். அரசன் சோயி. வில் நாழிகை அறிவார், நாழிகை உணர்த்த அவ்வப் போது எழுப்பும் அறிவிப்பொலியும், கூடங்களில் நிற்கும் யானைகளின் கூப்பீட்டு முழக்கமும், ஊர்க்காவலரின் துடி யொலியும், கடற்கரைக்கண் வந்து நிற்கும் கலங்களில் பணிபுரிவார் கள்ளுண்டுக் களித்துப் பாடும் பாட்டொவி யும், மகவின்ற மகளிர் புனிறுதிரப் புனலாடு அரவ்மும், வேந்தன் வெற்றி விளங்க, சதுக்கப் பூதத்திற்குப் பலி யிடும் வீரர்களின் ஆரவாரப் பேரொலியும் போலும் பற்பல ஒலிகள் ஒன்று கலந்து வந்து, அந்நள்ளிரவில் ஒலிக்கக்கேட்டு, உள்ளம் நடுங்கிளுள். பின்னர் ஒரு வாறு உள்ளம் தேறி மெல்ல எழுந்து, மணிமேகலா தெய்வம் கூறியவாறே வடபுலத்து வாயில் வழியே. சென்று சக்கரவானக் கோட்டத்தை அடைந்தாள்.

சக்கரவாளக்கோட்டம் புகுந்த சுதமதி ஆங்குச் சம்பாபதி கோயிலுக்கு அணித்தாக இருந்த ஊரம்பலத் துள் புகுந்து ஒருபால் அமர்ந்தாள். அப்போது, அவ். வம்பலத்தின் கீழ்ப்பால் துணில் இடம்பெற்று வாழும் ஒரு பாவை, சுதமதி மயங்கி மருளும் வண்ணம்,

" இரவிவன்மன் என்பானது ஒப்பற்ற மகளாக வினங்கியவளே! குதிரைப் படையிற் சிறந்தோனை துத்சயன், என்பவனின் மனைவியாக இருந்தவனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/98&oldid=561473" இலிருந்து மீள்விக்கப்பட்டது