பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.97

நெருங்கக் கட்டிய மலர் மாலையை அணிந்தோளான் நின் தமக்கையான தாரை என்பவள் சாவை அடைய மயக்க மூற்று, யானையின் முன்னர்ச் சென்று வீழ்ந்து நின்னு: பிரையும் விட்டவளே! இக்காலத்தே காராளர் நிரம்பி புள்ள சண்பை நகரத்துக் கெளசிகன் என்பவனின் மகளாகப் பிறந்தவளே! மாருத வேகன் என்பனேடு இந்நகரத்திற் புகுந்தவளே! முற்பிறவியில் நின் தமக்கை யாகிய தாரையென்பாளோடு மீண்டும் இப்பிறவியிலும் ஒன்று கூடியவளே! வீரையாகிய சுதமதியே’’

என்று, அவள் இப்பிறப்பு வரலாற்ருேடு முற்பிறப்பு வரலாற்றையும் அறிந்தாற்போல் விளித்தது. பாவை வாய் திறந்து பேசுவதையும், அது தன் வரலாற்றின அறிந்து உரைப்பதையும் கண்டு சுதமதி வியப்புற்ருள். - வியப்பின் வழித்தோன்றி அச்சம் அவளைப் பற்றத் தலைப் பட்டது. அப்போது, அப்பாவை மீண்டும் அவளை விளித்து, போன பிறவியில் இலக்குமி எனும் பெயரோடு உனக்கு இளையளாய் விளங்கிய மணிமேகல் தன் பழம் பிறப்போடு உன் பழம் பிறப்பையும் அறிந்துகொண்டு, . இற்றைக்கு ஏழாம்நாள் இடையிருள் யாமத்தில் வந்து

சேர்வள்; வருந்தற்க என்று உரைத்தது.

கந்திற்பாவை கூறியன கேட்டு, o சுதமதியுள்ளம் கலங்கி நடுங்கிற்று. அந்நிலையில் இருள் நீங்கிப் பொழுதும் புலர்த்துவிட்டது. எங்கும்.ஒளிபர்த்தது. புகார் உயிர் பெற்று எழுந்து விட்டது. அம்பேறுண்ட மயிலேபோல் நடுங்கியவாறே, சுதமதி, கிரநகர்வீதி

. . . . - 7شسس في

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/99&oldid=561474" இலிருந்து மீள்விக்கப்பட்டது