வை. மு. கோ. 103-வது நாவல்
94
பிளந்து விட்டால், இனி பணமேது. மண்ணேது… தர்மமாவது, தானமாவது. கர்மி கிழமா செய்யும்… நீங்களும் இப்படி குழம்பினால் எப்படி? பெட்டியை உடைத்துப் பார்த்து, ஏதாவது கிடைத்ததை…… இனி இந்த வீட்டில் எங்களுக்கென்ன வேலை… என்று ஒவ்வொருவர் வாக்கிலும், ஒவ்வொரு வித வார்த்தை உதிருவது காற்றில் மிதந்து வந்து, ஸ்ரீதரனின் காதுகளில் விழும் போது, வியப்பும், திகைப்பும் கூற முடியாது பொங்கியது.
“இந்த நோயாளியின் முன்பு, இத்தனைக் கும்பல் கூடி, சத்தமிட்டுப் பேசுவதே கூடாது. தயவு செய்து, எல்லோரும் விலகிச் செல்லுங்கள். பகவானின் கருணை இருந்தால், குணமாவது நிச்சயம், வீணாக கலாட்டா செய்யாதிருப்பது நல்லது,” என்று எல்லோரையும் விலகச் செய்து விட்டு, பலமான சிகிச்சைகள் செய்து வந்தான்.
பின்னும் சில நிமிஷங்களாயிற்று. கட்டிலின் பக்கத்திலேயே நின்று கண்ணும், கண்ணீருமாய் உருகும் பெண்மணியின் பிம்பம், ஸ்ரீதரனின் உள்ளத்தை உருக்கியது. அவன் தானாகவே பேசத் தொடங்கி, “அம்மணீ! கண்ணீர் விடுவதில் உபயோகமென்ன! அதை விட்டு, பகவானை ப்ரார்த்தனை செய்யுங்கள். இவர் உங்களுடைப் பிதாவா, அல்லது பாட்டனாரா…” என்று வினயமாய்க் கேட்டான்.
அந்தப் பெண், இது வரையில் அடக்கி வைத்திருந்த துக்கத்தைத் தடுக்க முடியாமல், பீறிக் கொண்டு வந்து விட்டதால், விம்மி, விம்மி அழுதுகொண்டு, "டாக்டர்! நான் பெண்ணாகவும், பேத்தியாகவும் இருந்திருந்தால், அதோ உள்ளிருந்து பல பல குரல்களால், பல பல வார்த்தைகள் வருகிறதே, அதில் என் குரலும் கலந்திருக்கும், உலகம் அவ்வளவுதான். இந்தக் கிழவரின் மனைவியாகிய பாபி நான்தான்…”
“என்ன! என்ன! மனைவியா! இவருக்கா…” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்… ஆமாம் டாக்டர்! இவர்