95
சாக்தியின் சிகரம்
ப்ரபல வக்கீல், என் பிதா பல குழந்தைகளையுடைய பெரிய குடும்பி. போதாத காலத்தின் விளைவால், ஒரு மகத்தான கொடிய வழக்கில் என் பிதா அகப்படுக் கொண்டார்! அந்த வழக்கில், இந்த மகான் ப்ரவேசித்து, ஜெயத்தை வாங்கிக் கொடுத்து, என் பிதாவை மீட்டு வைத்ததற்காக, இவர் என்னையே வக்கீலின் சன்மானமாக அபேக்ஷித்தார். வேறு வழியின்றி என் பிதா கொடுத்து விட்டார்! நான் குற்றம் செய்யாமலேயே, குற்றவாளியாய் ஆயுள் தண்டனையடைந்து, இந்தக் கம்பியில்லாச் சிறையில் சுமார் 5 வருஷமாக அவதிப் படுகிறேன். பகவானுக்கு இது கூட பொறுக்காமல், என்னை இன்னும் என்னென்ன செய்ய எண்ணுகிறாரோ, தெரியவில்லை. இந்த குடும்பத்தில் நான் ஒரு வேலைக்காரியைப் போல் இருப்பினும், என் பிதாவின் தவிப்பை உத்தேசித்தும், இவர் ஏதோ என்னிடம் பக்ஷமாக நடத்துவதாலும், நான் மூத்தவள் மக்களால் படும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு காலந் தள்ளுகிறேன்… டாக்டர் ! இவர் பிழைப்பாரா மாட்டாரா! சொல்லி விடுங்கள்…” என்று தன்னை மீறிய துக்கத்துடன் கேட்டாள்.
மனங் குழம்பியவாறு டாக்டர் அவளைப் பார்த்து, “தாயே! நாங்கள் ஏதோ கற்ற வித்தையை புத்திசாலித் தனமாகக் கையாண்டு வரும் தொழிலாளிகளேயன்றி, உயிரைக் கொடுக்கவோ, போக்கவோ சக்தி சர்வேச்வரன் கையிலிருக்கிறது. நீங்கள் பேசும் த்வனியிலிருந்து இவர் பிழைக்க மாட்டார் என்று தெரிந்த உடனே, தற்கொலை செய்து கொள்ள துணிந்திருப்பதை அறிகிறேன். அம்மாதிரி வீணான காரியம் செய்து விடுவதில், உங்களுக்கும் லாபமில்லை, உலகமும் இதை வெறுத்து ஏளனம் செய்யும். இந்த எண்ணத்தைக் கட்டோடு விட்டு விடுங்கள். மனித வாழ்க்கையில் உள்ள அனேக படிப்பினைகளை அறியக் கூடிய அதிக சந்தர்ப்பம் பெற்றவர்கள் நாங்கள். இது போல், பல இடங்களில் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறோம். தற்கொலை என்பது மகா பாதகம். தாயே! இப்படி எல்லாம் அசட்டுத்தனம் செய்யாதீர்கள்!” என்று