உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

சாந்தியின் சிகரம்

அழைக்க வேணும் என்ற ஆவலுடன் வந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரியா கிவிட்டது. இந்த மனிதன் என் க்ளாஸ்மேட்டு, வெகு நல்லவன், ஆனால், கடைசி காலத்தில் அவன் செய்துள்ள இந்த விவாக விஷயந்தான் எனக்குப் பிடிக்கவில்லை. எத்தனையோ சொல்லியும் கேட்காது, பாழ் பண்ணி விட்டான். இனி இதைப் பற்றிச் சொல்லி என்ன லாபம்? எப்படியாவது பிழைத்தால் போதும் என்றுதான் ப்ரார்த்தனை செய்ய வேண்டும். இதை எல்லாம் உத்தேசித்துத்தான் என் குழந்தையின் சுக வாழ்க்கைக்காக, என்னை நான் சிறந்த மார்க்கத்தில் செப்பனிட்டுக் கொண்டேன்…” என்று ஏதேதோ சொல்லும் போது, ஸ்ரீதரனுக்கு சடக்கென்று ஒரு எண்ணம் உண்டாகியது.

இவருடைய பெண்ணைத் தான் மணக்க வேண்டுமென்று சொல்லியது இவனுக்கு நினைவுக்கு வந்தது. தன் தம்பியின் இன்றய சோதனை சம்பவத்தினால், மனமுடைந்துத் தவிக்கும் உள்ளத்திற்கு ஆறுதலாய், இந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்தால் என்ன! அவனோ, படாடோப டாம்பீகத்திற்கு ஆசைப்பட் டுழலுகிறான். இவர் சொல்வதிலிருந்து உஷாவைப் போலவே… ஏன், உஷாவை விட அதிகமான படிப்பும், நாகரீகமும் கண்ணியமான குடும்பத்துப் பெண்ணாயுமிருப்பதால், இவரை எப்படியாவது சரிப்படுத்தி, இக்காரியத்தை தாமோதரனுக்கு முடித்து விட்டால், சகல அம்சத்திலும் நன்மையாக முடியும் என்ற எண்ணம் தீவிரமாகத் தோன்றியதால், வந்தவரை பலமாக உபசரித்துத் தானே தடபுடல் மரியாதை செய்தான்.

பின்னும் அரைமணிக்கெல்லாம் கிழவருக்கு நன்றாகத் தெளிவு கண்டு, கண் திறந்து பார்த்தார். இள நங்கையாகிய அப்பெண்மணியின் முகத்தில் புன்னகை பூத்தது கண்டு, ஸ்ரீதரன் மனத்திலும் சந்தோஷம் உண்டாகியது.

சா—7