வை.மு.கோ.103-வது நாவல்
98
மற்றபடி சிறிய டாக்டர்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, ஸ்ரீதரன் கிளம்பினான்.
வந்த பெரிய மனிதரும், மற்றவர்களுக்குத் தேறுதல் கூறி விட்டுக் கிளம்பியவர், டாக்டரிடம் தனிமையில் வந்து “ஸார்! நன்றாக யோசித்து, நாளை காலையில் என் மனங் களிக்கும் முறையில் பதில் சொல்ல வேணும். உங்களையே நான் ப்ரமாதமாய் நம்பி இருக்கிறேன். நாளை காலையில் நீங்கள் வரவில்லை என்றால், நான் அங்கு வந்து விடுவேன்” என்றார்.
“கட்டாயம் வருகிறேன் ஸார்! நாளைய தினம் நாம் இந்த விஷயத்தில், பரஸ்பரம் ஒரு மனப்பட்டு முடிவு செய்து விட்டுத்தான் மறு காரியம் என்று நான் கூட முடிவு செய்து விட்டேன். நாளைய தினம் நான் கட்டாயம் வருகிறேன்”—என்று கூறிச் சென்றான். இவ்விஷயத்தை, இப்போதே அம்மாவிடம் கூறி யோசனை கேட்டுக் கொண்டு பிறகு, தம்பியிடமும் தெரிவித்துச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் சென்றான். இன்று நடந்த ஒவ்வொரு புதிய, புதிய சம்பவமும் இவனுடைய வாழ்க்கையில் பெரும் படிப்பினை போல் தோன்றி, ஒரு இன்பமே உண்டாகியது.
15
“தம்பீ! நன்றாக நீ யோசித்து பதில் சொல்லு. உஷாவை விட சகல அம்சத்திலும் உயர்ந்தவள்; மேல் நாடெல்லாம் சென்று, ஜெயத்துடன் திரும்பும் மேதாவி, உயர்ந்த குடும்பத்துப் பெண். ஆகையால், நான் அதை உன்னிஷ்டப்படி முடித்து வைக்கிறேன். நீயும் என்னுடன் அங்கு வா. நேருக்கு நேராகப் பேசி முடித்து விடலாம். உனக்குப் பல விதத்திலும் நன்மை உண்டு. உன்னுடைய நலனுக்கே, நானும் அம்மாவும் பாடுபடுகிறோம். தீர யோசனை செய்து, நாளைக் காலையில் தெரிவி. நிம்மதியாகத்