உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

சாந்தியின் சிகரம்

தூங்கு”—என்று இரவே தம்பிக்கும் உபதேசித்துப் பின், தன் விடுதிக்குச் சென்றான்.

மறு தினம், காலையில் தனது வைத்ய சம்மந்தமான அலுவல்களை எல்லாம் முடித்துக் கொண்டு, கனவான் வீட்டிற்குப் போவதற்காக தாமோதரன் விடுதிக்கு வந்தான். தாமோதரன் ஸ்ரீதரன் வரவையே எதிர்பார்த்துக் கொண்டு, தடபுடல் அலங்காரத்துடன் இருப்பதைக் கண்டு, மிக்க சந்தோஷத்துடன் இருவரும் சென்றார்கள்.

டாக்டர் மட்டுந்தான் தனிமையில் வருவார் என்று துரைக்கண்ணன் எண்ணி, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சகோதரர்கள் ஜோடியாக வருவதைக் கண்டு, மிக்க சந்தோஷத்துடன், காரியம் கைகூடி விட்டதாகவே எண்ணி, வரவேற்றார்… “ஸார் ! நேற்றிரவு ஒரு அவஸரத் தந்தி வந்தது. என் மகள் இன்றே காலையில் வந்து விடுவதாயும், ப்ளேனில் பறந்து வந்து கொண்டிருப்பதாயும், என்உடல் நலம் சரியாக இல்லாததால், ப்ளேன் நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும் தந்தியில் கண்டிருக்கிறது. அதை உங்களிடம் டெலிபோனில் சொல்வதற்காக இரண்டு முறை கூப்பிட்டேன். நீங்கள் வீட்டிலில்லை என்று பதில் கிடைத்தது. இப்போதே வந்தாலும் வந்து விடலாம். சகலமும் வெகு சுபமாக முடிந்து விடலாம்”, என்று மளமளவென்று' தனது அபிப்ராயத்தை வெளியிட்டுப் பின், “டாக்டர்! இவர் யாரு?” என்றார்.

டாக்:- இவர் என் சகோதரர்; நல்ல குணசாலி, மகா மேதை… என்று சொல்லிக் கொண்டிருக்கையில் வாசலில் பெரிய கார் வந்து நின்றது கண்டு, துரைக்கண்ணன், “ஸார்! என் மகள் வந்து விட்டாள்; இதோ போய் அழைத்து வருகிறேன்” என்று கூறியவாறு வாசலுக்கு ஓடி வந்தார்.

அசல் ஆங்கிலேய மாதர் இருவரும், இரு வெள்ளைக்கார துரைமார்களும் மட்டும் வண்டியிலிருந்து இறங்கிய-