வை.மு.கோ. 103-வது நாவல்
8
திற்குச் சமமாக நினைப்பதுமே, ஆனந்த வாழ்க்கையாக எண்ணும் உணர்ச்சியைக் காண வியப்புக்கு மேல் வியப்பாகவன்றோ இருக்கின்றது! உலகம் போகிற வழியை விட்டு, என் தாயார் மட்டும் வேறு வழியில் போக முடியுமா? என்னையும், இந்த ஆழங்கால் சேற்றில் பந்தப்படுத்தி, அதையே பேராநந்தமாகக் கண்டு களிக்க ஆசைப்பட்டுத்தான் என்னைத் தொந்தரவு செய்கிறாள் பாவம்!… என்று இந்தச் சிந்தனையின் சுழலில் தாயாரின் நினைவும் ஒரு அலை போல் மோதி கண் முன்பு காட்சியளிக்கச் செய்தது.
எத்தகைய பதிலுமே சொல்லாமல், டாக்டர் ஏதோ பலமான யோசனையில் அப்படியே அசைவற்று ஆழ்ந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டதும், பெண்ணின் தாயாருக்கு மிகவும் திகிலும், பலவிதமான எண்ணங்களும் தோன்றி வருத்துகிறது. சற்று முன்பு பயப்படாதீர்கள் என்று சொல்லிய அதே டாக்டர், எதனால் இத்தனை மவுனமாய் சமாதி நிலையில் உட்கார்ந்திருக்கிறார் என்ற பயம் தோன்றியதால், ஆவலே வடிவாய் டாக்டரை நோக்கி, “டாக்டர்! நீங்களிருக்கும் நிலைமையைப் பார்த்தால், என் வயிற்றில் சங்கடம் செய்து, அபாரமான பயத்தை உண்டாக்குகிறதே! என் கண்மணிக்கு எத்தகைய பயமும் இல்லையே? என் செல்வக் கனிக்கு எத்தகைய அபாயமும் இல்லையே?”… என்று மறுபடியும் துடிக்கும் உள்ளத்துடன் கேட்டாள்.
அதன் பிறகே, சுய நினைவு பெற்று விழித்துக் கொண்ட டாக்டர், சிரித்தபடியே, “தாயே! உயிருக்குப் பயமேயில்லை. நான் ஏதோ வேறு சிந்தனையி லாழ்ந்திருந்தேன். பகவான் உங்களுக்கு எத்தகைய குறையும் வைக்க மாட்டார். நான் சாயங்காலம் வரும் போது, ஜுரமே குறைந்து விடும்; பயப்படாமல், கடவுளை நம்பி இருங்கள். அவன் சாந்தியைக் கொடுப்பான்" என்று தத்வோபதேசமும் கூடச் செய்து விட்டுக் கிளம்பும் சமயம்... “டாக்டர்! கொஞ்சம் காப்பி