உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

சாந்தியின் சிகரம்

சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும்”… என்று மிகவும் அன்புடன் கூறினாள்.

டாக்டர்:— தாயே! மன்னிக்க வேண்டும். நான் ஆங்கில முறையில் பயின்று, தொழில் செய்யும் டாக்டராயினும் நம் நாட்டு இயற்கையான பண்டைய பெருமையை, பழக்க வழக்க மகிமையைப் புறக்கணித்து, நாகரீகத்தில் மூழ்கும் மோகத்திற்கு அடிமையானவனல்ல. நான் வைத்யம் செய்யும் இடங்களில் எல்லாம் காப்பிக் குடியை விட்டு ஒழியுங்கள்; பதிலுக்குக் கேழ்வரகு கஞ்சியோ, வெறும் பாலோ அல்லது மோரோ சாப்பிட்டால், உடம்புக்குத்தானே வலிவு கொடுக்கும். வ்யாதியும் சிலவற்றை அண்ட விடாமல் தடுக்கும் சக்தி உண்டாகும் என்றுதான் நான் சொல்வது வழக்கம்.

பெண்மணி:— டாக்டர்! காப்பி குடித்தால் உண்டாகும் சுறுசுறுப்பு, மோரினாலும் பாலினாலும் வருமா? காலையில் இவைகளை எப்படிக் குடிப்பது?

டாக்டர்:—(பெரி தாகச் சிரித்துக் கொண்டே) தாயே! உங்களுக்கு ப்ரமாண, ப்ரத்யக்ஷம் ஸோடா வாட்டர் ஒன்றைப் பாருங்கள். அதன் காஸ் பவர் ஆறும் வரையில் அது ப்ரமாதமாய்ச் சீறுகிறது. ஆறி விட்டால், அந்தத் தண்ணீரை யாராவது சீந்துகிறார்களா! ஸோடாவிற்கு எத்தனை சக்தியிருக்கிறதோ, அதை விட அதிகமான சக்தி நம்முடைய பழய பாட்டிமார்கள் செய்யும் பெருங்காய கஷாயத்தில் இருக்கிறது! அது உடம்புக்குள் ஊற, ஊற வாயுவினாலும், உஷ்ணத்தினாலும் உண்டாகும் ரோகத்தை நன்றாகக் கண்டித்து, பூர்ண குணத்தை நிரந்தரமாக உண்டாக்கும் அது போல், காப்பி குடித்ததும் ஏதோ தேவலோகத்தில் உங்களை உயர்த்துவது போல் தோன்றுகிறதேயன்றி, இயற்கையாய் உள்ள சுய ஆரோக்யத்தை, சக்தியை அது கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறது! மோரிலோ, பாலிலோ உள்ள சத்து பதார்த்தம் காப்பியில்