உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

10

கிடையாது. தற்போது, மேல்நாட்டினர்கள் கண்டு பிடித்துள்ள பென்ஸிலின் என்கிற மருந்தில் என்ன ஸத்துக்கள் இருக்கிறதோ, அத்தனை சத்தும்... அதை விட உயர்ந்த ஸத்தும்… நாம் தினப்படி உபயோகப்படுத்தும் மோரில் இருக்கிறது! இவைகளை எல்லாம் நன்றாகத் தெரிந்து, நம் பெரியவர்கள் அந்தச் சிறந்த பதார்த்தத்தை நமது ஆகாரத்திற்கே பரதானமாய் வைத்திருக்கிறார்கள். இவைகளை நாம் கவனித்தால்தானேம்மா!… கேழ்வரகுக் களியும் கூழும் குடித்து விட்டு, வேலை செய்யும் உழவனுக்குள்ள பலம் நமக்கிருக்கிறதா பாருங்கள்!

பெண்மணி:- டாக்டர்! காலையில் நாங்கள் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தயிரை விட்டுப் பழயதுதான் போடுகிறோம்.அதைக் கண்டு பிறர் பரிகஸிக்கிறார்களே!

டாக்டர்:- தாயே! ஊராருக்காக, நாம் வாழ்க்கையைச் செப்பனிட முடியுமா? நமக்காகவே நாம் வாழ வேண்டும். நமக்காகவே நாம் ஒரு கொள்கையைத் தீர்மானமாய் வகுத்துக் கொள்ள வேண்டும். கடவுளுக்கு முகோல்லாஸமாய் அவனுடைய தினக் குறிப்புப் புத்தகத்தில், சிறந்த முறையில் பதிவாகும்படியாக நடந்து கொள்ள வேண்டுமேயன்றி, ஒருவருக்குப் பயந்து வேஷம் போடுவது முட்டாள் தனமல்லவா? அம்மாதிரி, பிறரை த்ருப்தி செய்யும் முறையில் நாம் இறங்கி விட்டால், வாழ்க்கையில் சாந்தியை அடைய முடியாது. பழய சாதத்தை சிலர் பரிகஸிக்கலாம். இலை போட்டு கையால் எடுத்துச் சாப்பிடுவதைச் சிலர் பரிகஸிக்கலாம். தலையை லட்ச்மீகரமாக வாரிப் பின்னலிடுவதை சிலர் பரிகஸிக்கலாம். ஜாதி, மத வழக்கப்படி உடையணிவதையும், நெற்றியில் அலங்காரமாய்ப் பொட்டிடுவதையும் சிலர் பரிகசிக்கலாம். இவைகளுக்காகத் தம், தம் கொள்கைகளை விட்டு விட்டு, டேபிலில் கரண்டியினால் சாப்பிடவும், தலையை பாழ் செய்யவும், முகத்தை அவலக்ஷணமாய் பாழும் முகமாய் வைக்கவும், துணிந்தால் வாழ்க்கை