101
சாந்தியின் சிகரம்
நான்கு வெள்ளைக்காரர்கள் நிற்கிறார்கள்; இவர் மூர்ச்சையாகி விழுந்து கிடக்கிறார். விவரம் ஒன்றுமே புரியாத நிலைமையில், துரைக் கண்ணனை சோதித்துப் பார்த்தான். தாங்க மாட்டாத அதிர்ச்சியினால், இதயம் வெகு வேகமாய் அடித்துக் கொள்கிறது. நாடி துடிக்கிறது. நிலைமை திடீரென்று படுமோசமாய் விட்டதைக் கண்டு, ஒன்றுமே புரியாத ஸ்ரீதரன் தம்பியின் உதவியால், அவரை உள்ளே கொண்டு வந்து படுக்க வைத்து, சிகிச்சை செய்யத் துடங்கினான்.
“ஸார்! என் தகப்பனாருக்கு திடீரென்று எதனால் இப்படியாகி விட்டது. எனக்கு ஒன்றுமே தோன்றவில்லையே! தாங்கள் யாரோ தெரியாது. நான் இவருடைய மகள். என் கணவர் இவர்”… என்று அவள் சொல்வதைக் கேட்டு, உண்மையில் ஸ்ரீதரன் திடுக்கிட்டு அப்படியே அலறினான்… “இவருடைய மகள் பாமா என்பவரா தாங்கள்… சரிதான் இப்போது விஷயம் புரிந்து விட்டது. உங்களுடைய விஷயமே அவருடைய அதிர்ச்சிக்குக் காரணம். நான் இவருடைய டாக்டர்…ஸ்ரீதரன். இவருக்கு நான்தான் வைத்யம் செய்து குணப்படுத்தினேன்…” என்று சொல்லியபடியே, உயர்ந்த மருந்துகளை ஊசி குத்தி, பலமான சிகிச்சைகள் செய்தான்.
10 நிமிஷம் கழித்து துரைக்கண்ணன் கண்ணைத் திறந்தார். “ஐயோ! குடி.. முழுகி விட்டதே… டாக்டர் ஸ்ரீதரனுக்கு உன்னை மணம் செய்வித்துக் களிக்க, நான் கட்டிய என் மனக்கோட்டை எல்லாம் இடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டதே! ஐயோ உலகமே இருண்டு, என் வாழ்க்கையில், அந்தகாரம் குடி கொண்டு, என்னை நாசமாக்கி விட்டது. சகலமும் அழிந்து மண்ணோடு மண்ணாகி மங்கி விட்டது. த்ரோகி! குலநாசகீ! குடியைக் கெடுத்த சண்டாளி! நீயா என் மகள், நீயா என் பாமா! நீயா என் வாழ்க்கையின் தீபம்? இல்லை! இல்லை! ஒரு நாளுமில்லை. மானஹீனமற்ற படு பாவி! இனி அரை க்ஷணங் கூட இந்த இடத்தில்