103
சாந்தியின் சிகரம்
கொண்டாடட்டும்! எனக்குள்ள சகல சொத்துக்களையும், தர்ம ஸ்தாபன நிதிக்காக ஸ்ரீமான் டாக்டர் ஸ்ரீதரனிடம் ஒப்படைத்து விடுகிறேன். இந்த பங்களா ஒரு தர்ம வைத்யசாலையாக ஆகட்டும். மானங்கெட்ட மிருகங்களின் உபயோகத்திற்கு உதவாமல், இந்த சொத்துக்கள் பூராவும் ஒரு சிறந்த தர்மத்திற்கு உதவட்டும்… டாக்டர்! என் வக்கீல் வெங்கோபராவைக் கூப்பிடுங்கள்… போடா! முனியா! வெங்கோபராவைக் கூப்பிடு…” என்று பெரிதாகக் கத்தித் துள்ளி குதிக்கும் போது, ஏற்கெனவே இவருடைய குமாஸ்தாவினால், வக்கீலுக்கு இந்த ரகளையான விஷயம் போன் மூலம் அறிவிக்கப்பட்டதால், அவர் அலையக் குலைய ஓடி வந்தார்.
அதே சமயம், துரைக்கண்ணனை எத்தனை தடுத்தும், ஆத்திரத் தீ அடங்காமல் கொழுந்து விட்டு, ஜ்வாலை வீசி எரிந்ததால், அவர் தன் மகளை சுவருடன் வைத்து மோது மோது என்று மோதி உருட்டித் தள்ளினார். அதே சமயம் வந்த வக்கீலும் தடுக்க முயன்றும், வீணாகி விட்டது.
துரைக்கண்ணன் வக்கீலைப் பார்த்ததும், “வக்கீல் ஸார்… இந்த வீடு கொலை களமாகி விட்டது. அதோ! அதோ! ஸ்ரீதரனை இந்த வெள்ளைக்காரப் பாவி அடித்துத் தள்ளி இருப்பதை முதலில் கவனியுங்கள். என் சொத்துக்கள் பூராவும் துடப்பக்குச்சி முதல் சகலமும் ஸ்ரீமான் ஸ்ரீதரனின் தர்ம ஸ்தாபனத்திற்குக் கொடுத்து விட்டேன்… உம்… எழுதுங்கள்… ஸார் சாக்ஷி கையொப்பம் போடுங்கள்; என் மகள் குல த்ரோகி; மத த்ரோகி; தாய் நாட்டின் மதிப்பைக் குலைத்த சண்டாளி; அவளை நானே கொன்று விட்டேன். இதோ நானும் சாகப் போகிறேன். நான் ஸ்ரீதரனுக்கு சொத்துக்களை சத்யமாகச் சேர்த்து விட்டேன். காலணா சொத்துக் கூட இந்தப் பாவிகளுக்குச் சேரக் கூடாது. என் பெண்ணை ஏமாற்றி, மோசம் செய்து, கற்பழித்தது ஒன்று, ஸ்ரீதரனை அடித்துத் தள்ளியது ஒன்று. ஆக இரண்டு குற்றங்களுக்கும் இந்தச் சண்டாள நாயை