வை. மு. கோ. 103-வது நாவல்
104
கைது செய்து இழுத்துச் செல்லுங்கள்…” என்று படபடப்பாய், வெகு ஆவேசத்துடன் கூறியவாறு, வச்கீல் எழுதிய கடிதத்தைத் தானே படித்துப் பார்த்துக் கையொப்பமும் இட்டுக் கொடுத்தார்.
அடிபட்டு விழுந்து விட்ட ஸ்ரீதரனை, வக்கீலும், தாமோதரனும் மெல்லத் தேற்றி அழைத்து வந்தனர். “ஸார்! இதென்ன அக்ரமம்? திடீரென்று இம்மாதிரி நிலைமைகள் உண்டாகலாமா! நீங்களாவது தணிந்து போக வேண்டாமா!” என்று டாக்டர் சொல்லும் போது, துரைக் கண்ணன் மறுபடியும் தன் மகளை ஒரு மிதி மிதித்துத் தள்ளிய வேகத்தில், படீரென்று இதயம் வெடித்து மாண்டாள்!
வெள்ளைக்கார மாப்பிள்ளை கண்ணு மண்ணு தெரியாத ஆத்திரத்தில், “எனக்குப் போட்டியாய் வந்ததுமல்லாமல், நான் சந்தோஷமாய் வந்திறங்கிய உடனே, என் மனைவியின் உயிரைக் குடிக்கக் காத்திருந்த எமனே!” என்று ஸ்ரீதரன் மீது அஸாத்ய கோபங் கொண்டு, தடார் புடார் என்று அடித்து ஓங்கி அறைய, அதிமூர்க்கத்தனத்துடன் வந்ததை, அந்த துரைமகனின் சகோதரியே தடுத்துக் கைகளைப் பிடித்துக் கொண்டு பார்த்தும், அவன் சீறிக் கொண்டு வந்து, சரியானபடி முதுகிலும், காலிலும் அகப்பட்ட இடத்தில் அடித்து, ஆங்கிலத்திலேயே திட்டித் தாண்டவமாடுகிறான். ஒரே தாவாகத் தாவி, வக்கீலிடமுள்ள அப்போது எழுதிய கடிதத்தை, அப்படியே சடக்கென்று பிடுங்கிக் கொண்டு, பதுக்கி விட்டான்.
இந்த திடீர் பாய்ச்சலைக் கண்ட துரைக்கண்ணன், வெள்ளைக்காரன் மீது அடங்காத ஆத்திரங் கொண்டு, “கொலை பாதகா! என் குலத்தை நாசம் செய்ய வந்த சண்டாளா! மகா தர்மபிரபுவான டாக்டர் மீது ஏனடா பாய்கிறாய். உன் மனைவியாம், மனைவி! அவரையா நீ அடிக்கிறாய். நாயே! வெளியே போடா கழுதை”… என்று