107
சாந்தியின் சிகரம்
ரமான மயக்கத்தின் அதிர்ச்சியினால், அப்படியே வார்த்தைகள் நின்று விட்டது.
இதையே சந்தரப்பமாகக் கொண்ட ஸ்டோன் துரை… “ஸார்! போதுமா! ஆளை நேருக்கு நேராகக் காட்டி, இவர்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று சொல்லி விட்டார். இனியும் சம்சயமா…” என்று சுந்தரத்தின் உள்ளத்தைக் கலக்கி, அதே சமயம் மாமா… “ஹா!… என் குடியைக் கெடுத்த கொலை பாதகனின் கண் முன்பு, இதோ நானும் வந்து விட்டேன்… டாக்டர்… டாக்டர்… இந்தக் கொலையை” என்று முடிப்பதற்குள் சடக்கென்று உயிர் நின்று விட்டது.
அவ்வளவுதான் தாமதம், சுந்தரம், “ஐயோ! மாமா… பாமா… கொலையா செய்யப்பட்டு, இருவரும் ஒரே காலத்தில் ஒன்றாய்ச் சென்று விட்டீர்கள் கொலை கொலை…” என்று ஆவேசம் வந்தவனைப் போல் கத்திக் கொண்டு, வாசலில் ஓடி வந்தான். ஸ்டோன் துரையும் சேர்ந்து கொலை, கொலை’ என்று கத்துகிறான். உண்மையில், ஸ்ரீதரனுக்கு ஒன்றுமே தோன்றாமல், ப்ரமை பிடித்து விட்டது. தாமோதரனுக்கோ, இந்த அதிபயங்கரமான சந்தர்ப்பங்களைப் பார்த்ததும், கதி கலங்கிப்போய் விட்டது. ஏற்கெனவே, தன் வீட்டில் அன்று நடந்த பிசாசு சம்பவத்தின் அதிர்ச்சியினால் உள்ளம் தளர்ந்திருந்ததால், இந்த கோரமான விபத்துக்களைக் கண்டதும், மயக்கமே போட்டு விழுந்து விட்டான்.
வெள்ளைக்காரனின் சகோதரியும், அவள் கணவனும் கீழே கிடக்கும் பாமாவை ஆட்டித் தூக்கிப் பார்த்தார்கள். சவமாக விருப்பது கண்டு நடுநடுங்கித் துடிக்கிறார்கள். அதே சமயம், பொதுமக்களில் முக்யமான அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தார்கள். இரண்டு சவம் இரண்டு மூலையில் இருப்பதையும், டாக்டர் ஸ்ரீதரனின் சரீரத்தில் பல இடங்களில் ரத்தம் வருவதையும், இந்த அதிர்ச்சிகளைத் தாளாமல் தாமோதரன் ஸ்மரணையற்றுக்