உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

108

கிடப்பதையும் கண்டு விவரம் புரியாமல், போலீஸுக்கு உடனே தகவல் கொடுத்து விட்டார்கள்.

அடுத்த க்ஷணமே போலீஸார் வந்து விட்டார்கள். ஸ்டோன் துரையே போலீஸாரிடம் முந்திக் கொண்டு, “ஸார்! இரண்டு கொலைகளையும் செய்தவர் இதோ! இந்த டாக்டர்தான். என் மனைவியான பாமாவை இவன் மணப்பதாக ஏற்பாடு செய்திருந்தானாம். எனக்கும், பாமாவுக்கும் மேல் நாட்டில் சட்டப்படி விவாகமாகி விட்டதை, இவர்களுக்கு பாமா அறிவிக்கவில்லை. தன் பிதா, தன் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார் என்கிற தைரியத்தினால், நேராகவே சென்ற பிறகு சொல்லலாம் என்றிருந்தாள். இன்று நாங்கள் இங்கு வரும் போது, இந்த மனிதன் இங்கிருந்தான். நாங்கள் தம்பதிகளாக வந்த விவரம் தெரிந்த உடனே, முதலில் என் மனைவியை அடித்துக் கொன்றதோடு, அவள் பிதாவையும் அடித்துக் கொன்று விட்டால், இந்த சொத்துக்கள் பூராவும் தானே அடைந்து விடலாம் என்கிற ஆத்திரத்தினால், கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கையில், இரண்டு கொலைகளை ஒரே நிமிஷத்தில் நடத்தி விட்டான். இந்த வக்கீலும் அவனுக்கு உடந்தை. அதோ நிற்கும் குமாஸ்தாவும், இந்த மனிதனும்… (தாமோதரனைக் காட்டி, இவனும்) கொலைக்கு உடந்தை” என்று தானே கடகட வென்று வாக்குமூலங் கொடுத்தான். “இதோ! இந்த மனிதர் துரைக்கண்ணனின் சொந்தக்காரராம். இவர் இப்போதுதான் வந்தார். இவரும் சாக்ஷி. சகல விவரமும் இவரைக் கேளுங்கள்” என்று சுந்தரத்தைக் காட்டினான்.

இதற்கு சுந்தரமும் தேம்பித் தேம்பிப் புலம்பிய படியே, “ஸார்! நான் வெகு நாட்களாக பாமாவை மணக்க ஆவல் கொண்டிருந்தேன். மாமாவுக்குச் சரியாகப் பணம் சேகரிக்க வேண்டி, மாமாவின் அனுமதி பெற்று, மலேயாவுக்கு அவருடைய உதவியினால் சென்று, வ்யாபாரம் செய்து வந்தேன். பாமா வெளிநாடு சென்றதும், எனக்-