உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

சாந்தியின் சிகரம்

விட்டு விட்ட வேகத்தின் அலங்கோலத்தினால் உத்தமனாகிய அண்ணனையே, தீராத விரோதி போல் எண்ணி விட்டோமே என்ற விசனமும், அவனை வெகுவாய்ப் பாதித்து வாட்டுகிறது.

‘எந்த விதமான காரியத்தைச் செய்தால், நிரபராதியான அண்ணனின் இந்த அபவாதப் பழியை நீக்கி, விடுதலை பெறச் செய்யலாம்?… என்னுடைய பாபத்தைப் போக்கிக் கொள்ள வழி தேடலாம்’ என்கிற அபாரமான உணர்ச்சிதான் தலை தூக்கி நின்றது. இந்த நிமிஷம் வரையில், ஆத்மார்த்தமான எந்த விஷயத்திலும் சம்மந்தப்படாது, வெளி வேஷத்திலும், டாம்பீகத்திலும், சிற்றின்பத்திலும், அநாகரீகத்தையே தனது வாழ்க்கையின் சாச்வதமான நாகரீகம், பண்பாடு, சுக்ருதம் என்றெல்லாம் எண்ணி, மனத்தையும், தனத்தையும் நாசம் செய்து வந்த ஊதாரித்தனத்தின் அவகேடு, இப்போதுதான் நன்றாகப் பளிச்சென்று தெரிந்தது.

முதல் நாள் உஷாதேவி மூலம் ஏமாற்றம் உண்டாகிய போது, அண்ணன் மீதுதான் அஸாத்ய கோபம் வந்தது. தேவதாசி வகுப்பில் பிறந்தவர்களுக்கு உறவு முறை என்ன வேண்டிக் கிடக்கிறது! “தேவடியாள் மக்களுக்குத் தகப்பன் யாரு?” என்பது பழமொழி! அங்ஙனமிருக்க, தேவடியாளின் உறவில் அண்ணனாவது, தம்பியாவது? இதெல்லாம், வீணான வார்த்தைகள். ஆதலால், இதைப் பற்றி அண்ணனை எதிர்த்தடித்துப் பின், உஷாவையே மணந்து உல்லாஸமாயிருப்பதே சரி என்று தீர்மானித்த அதே மனிதன்… உஷாவின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, மனது குழம்பிய அதே மனிதன்… இன்று இச்சம்பவத்தினால், முற்றிலும் மாறி விட்டான் என்றால், எத்தனை ஆச்சரியம்!

அவன் ஜென்மத்தில், ஜாதி வழக்கப்படி வேஷ்டி உடுத்தியதே கிடையாது. சதா கால்சட்டையே அணிந்திருப்பவன். இன்று அண்ணனைக் கைது செய்து, அழைத்-