வை.மு.கோ. 103-வது நாவல்
126
துச் சென்றதும், அனலிடை மெழுகெனத் துடித்து உருகியவாறு, வீட்டிற்கு வந்தான். அந்தோ! பூஞ்சோலை போல் குளுகுளுவென்று காட்சியளித்த அதே மாளிகை, சூனியமே குடி கொண்ட பயங்கர நரகம் போல் காட்சியளிக்கும் உணர்ச்சியை, கமலவேணியை விட தாமோதரன் அதிகம் உணர்ந்து துடித்தான். நேரே சென்று ஸ்நானம் செய்து விட்டு, அவன் ஜென்மத்தில் முதல் தடவையாக வேஷ்டியை அணிந்து, நெற்றியில் விபூதி குங்குமமணிந்து கொண்டு, நேரே பூஜா ரூமுக்குச் சென்றான். காலையில், தன் அண்ணன் பூஜை செய்து விட்டுச் சென்ற அழகும், வாஸனா த்ரவ்யங்களின் பரிமளமும் தீப ஜோதியின் ப்ரகாச எழிலும், பகவானின் தரிசன அழகும். ஒன்று கூடி, இது வரையில் அனுபவித்திராத ஒரு தனி உணர்ச்சியும், வசீகரமும் மின்ஸார சக்தி போல், இதயத்தில் பாய்ந்து, விசித்ரமான தாக்குதலை உண்டாக்கிக் கண்ணீரை அவனறியாத படியே உதிரச் செய்தது.
“அடாடா! இத்தகைய அபூர்வமான ஆனந்தத்தை உண்மையான ஆனந்தமென்றே மதியாமல், இது காறும் பாழாகி விட்டோமே” என்று தானே நெஞ்சுருகும்படியான நூதன உணர்ச்சி உண்டாகியதும், சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்தான். “என்னப்பனே! ரக்ஷகா! என் அஞ்ஞான இருளைப் போக்கி, ஏதோ ஒரு சிறிது புத்தியுண்டாக்கிக் கண் திறக்கச் செய்தது மட்டும் போதாது. இத்தகைய உணர்ச்சிக்குக் காரணமாயமைந்த கொலைக் குற்றச்சாட்டை என் அண்ணன் மீது சாராது மாற்றி, அவன் உடனே விடுதலையாகி வந்து, உங்களை ஆனந்தமாய் ஸேவிக்குபடியான சந்தர்ப்பத்தைக் கொடுத்து, எங்களை ரக்ஷிக்க வேண்டும். என்னருமைத் தாயாரின் உள்ளத்தை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் நீ உண்மையான கடவுளாக இருந்தால், உத்தமனை உத்தமன் என்று உலகமறியச் செய்து காட்ட வேண்டும். என் அண்ணனின் மகிமையை நான் இதுகாறும் அறியாத பாவியாகி விட்டது