வை.மு.கோ.103-வது நாவல்
130
பெரியம்மா!… அண்ணா! நீங்களிருவரும் கவலையே பட வேண்டாம். நான் இப்போது லேடி டாக்டர் துளஸீபாயைப் போய்ப் பார்த்து வந்தேன். எந்த விதமாவது பாடுபட்டு, அண்ணாவை நிரபராதி என்று உலகமறியச் செய்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பது என்று நாங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டோம். நானே இனி அனாதை நிலயத்தின் பொறுப்பை, சகல விதத்திலும் முன் நின்று கவனிப்பதாகச் சொல்லி விட்டுப் பின்னர்தான் இங்கு வந்தேன். போலீஸ் கமிஷனர் ஸ்ரீமான் அச்சுதன் அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும்: (குறிப்பு: ஸ்ரீமான் அச்சுதனைப் பற்றி அறிய ஆவலுள்ளவர்கள் வை. மு.கோ.வின் 50-வது புத்தகமாகிய ஆத்ம சக்தி என்கிற துப்பறியும் நாவலை வாங்கிப் படித்தால் தெரியும்) அச்சுதனின் மகளும், நானும் க்ளாஸ்மேட்டுகள். அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்: அவர் மிகவும் கெட்டிக்காரர்; நல்ல உத்தமர். அவருடைய மனைவி மகா மேதை; தர்ம லட்ச்மி என்றால் தகும். அந்த உபகாரியிடம் போய், நான் இது விஷயமாக விசாரித்துப் பின் பெயிலில், அண்ணாவை மீட்க ப்ரயத்தனம் செய்யப் போகிறேன்… எப்படியும் அண்ணாவுக்கு விடுதலை கிடைத்து விடும்…”
என்று மூச்சு கூட விடாமலும், எதிரிலுள்ளவர்கள் பேச இடமில்லாமலும், படபடவென்று, தானே பேசுகிறாள். தாமோதரனும், முற்றிலும் புதிய வாழ்க்கையை ப்ரமாண பூர்வமாய் மேல்கொண்டு விட்டதால், இப்போது உஷாவைப் பார்த்ததும், பழைய கல்மஷமான எண்ணங்கள் தோன்றாமல், ஒரு வித வியப்பும், புனிதத் தன்மையின் சாயலும் தோன்றித் திகைக்கச் செய்தது. உஷாவின் தாயார் சுந்தராம்பாள், மிகுந்த வணக்கத்துடன், “அக்கா! நான் பலவிதத்திலும் கீழ்த்தரமானவள். எனினும், முறை தவறி ஒழுங்கற்றுக் கற்பிழந்து வாழவில்லை. அவரை மணந்து, அவருடன் சகலமும் மறைந்-