131
சாந்தியின் சிகரம்
தது; எனினும், நம் உஷாவுக்காக எனக்குள்ள சங்கீதம், நடிப்புக் கலை இரண்டையும் உபயோகித்துப் பொருள் சம்பாதித்தது உண்மை. அது கூட விட்டுச் சில வருஷங்களாகி விட்டன. எத்தனை குற்றங்களிருப்பினும், மன்னித்து, குழந்தை உஷாவின் எதிர்காலத்தின் வாழ்க்கைக்கு, நீங்கள்தான் துணை புரிந்து உதவியளிக்க வேணும். நம் குழந்தை டாக்டரைப் பற்றி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் துப்பறியும் ராஜாராம் நாயுடுவைப் பார்த்துத் தகுந்த ஏற்பாடு செய்து, கட்டாயம் விடுதலை பெறும்படிச் செய்கிறேன். பயப்பட வேண்டாம். பெற்ற வயிற்றின் துடிப்பு எத்தகையது என்பதை என்னுள்ளம் அறியாமலில்லை… தம்பீ! நீயும் கண்ணீர் விடாதே. பணத்தை ஜலமாகச் செலவிட்டு, கடைசி வரையிலும் ,அப்பீல் செய்தே தீர்த்து விடுவது என்று உஷாவும், நானும் சங்கல்பம் செய்து விட்டோம். இனி ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்காமல், கண்ணீர் விட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கக் கூடாது; வா, தம்பீ! நாம் நாயுடுகாருவின் வீட்டிற்குப் போகலாம்”… என்று மரியாதையாய்க் கூறினாள்.
கமலவேணியின் ஆச்சரியம் கரை புரண்டது. நேற்று ப்ரமாதமான ஆடம்பரத்திலிருந்த அதே பெண்ணா, இன்று இப்படி மாறி விட்டதோடு அல்லாமல், பழைய எண்ணங்களை அடியோடு மறந்து போய், முற்றிலும் புனர் ஜென்மம் எடுத்த மாதிரி ஆகி விட்டது என்ன விசித்திரம்? பாவம்! சிறு பெண்ணாயிருந்தும், எத்தனை விவேகம் உதயமாகி விட்டது!…என்ற பச்சாத்தாபமும், அன்புமே தோன்றிய வேகத்தில், உஷாவை இழுத்து அணைத்துக் கொண்டு, “குழந்தாய்! உலகச் சுழலில் எத்தனை விசித்ரமான மாறுதல்களை நாம் காண்கிறோம் பார்த்தாயா! சகலமும் பூகம்பத்தின் அதிர்ச்சியும், விசித்திரமுமாகவே இருக்கிறது. சகலமும் பகவானின் செயல். அந்த ரக்ஷகன் நம் ஸ்ரீதரனின் நிரபராதித்தனத்தை வெளியிட்டு, அவனுடைய லக்ஷியப்படி அவனை சாந்தியின் சிகரத்தில் வைத்து ரக்ஷித்தால்,