135
சாந்தியின் சிகரம்
நாளைக் கழித்து விட்டேன்! அண்ணாவின் பெருமையை, அம்மா எடுத்துச் சொல்லும் போதெல்லாம், அம்மாவை வஞ்சனைக்காரி என்றும், பக்ஷபாதமுள்ள மோசக்காரி என்றும் வாய் கூசாமல், பெற்ற மனத்தின் தவிப்பை அறியாமல் திட்டினேனே, இந்தக் குழந்தைகள் கேட்கும் போதல்லவா, என் முட்டாள் தனம் இன்னும் அதிகமாய்த் தெரிகிறது…”
என்று தனக்குள்ளேயே எண்ணும் போது, கண்ணீர் அடக்க முடியாமல் மளமளவென்று வந்து விட்டது. ஏதோ ஒருவாறு சமாளித்து அடக்கிக் கொண்டு, உள்ளே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே வருகையில், அந்த நிலையத்தின் பூஜாக்ருகத்தில் சில வயது வந்த அனாதைப் பிள்ளைகள், பெண்கள், சில பெரியவர்கள் முதலிய பலரும் பகவான் முன்பு மண்டியிட்டு ப்ரார்த்தனை செய்து, “என்னப்பனே! எங்கள் எஜமானர் நிரபராதி என்பதை நீயுமா அறிய மாட்டாய்? அவர் மிதித்த மண் கூட கொலை செய்யாதே! அப்படி இருக்க, பரோபகாரத்திற்கே உழைத்துப் பாடுபடும் எங்கள் உத்தம த்யாகியை, கொலைகாரன் என்று சிறையில் அடைப்பதை நீ பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கிறாயே! இது உனக்குத் தகுமா? இது அடுக்குமா? உன் பெருமைக்கு இது பொருந்துமா? எங்கள் வள்ளலான டாக்டரை நிரபராதி என்று விடுதலை செய்யப் போகிறாயா? அல்லது அவர் வளர்த்துப் பயிரிட்டு உருப்படியாக்கி வரும் எங்களை எல்லாம் கொலை செய்யப் போகிறாயா? எங்க டாக்டரை நீ நிரபராதி என்று காட்டாமல், தூக்குமரத்தில் மாட்டி, வேடிக்கை பார்ப்பாயானால், நாங்கள் அத்தனை பேர்களும் தற்கொலை புரிந்து கொண்டு, அந்தக் கொலை பாதகத்தை உன் மீதே சாரும்படிச் செய்வோம்! எங்கள் டாக்டர் சத்யசந்தன்; அவர் மகா ஞானி; கருணாமூர்த்தி; த்யாக பிம்பம்; அவருடன் பிறந்த அல்பனைப் போல் அவரையும் நினைத்து விட்டாயா ?”… என்று மனமுருகிக் கண்ணீர் பெருகக் கதறி, ப்ரார்த்தனை செய்யும் உள்ளன்பையும், பக்தியையும் நேரில் காணும் தாமோதரனின்