உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

சாந்தியின் சிகரம்

ஓட்டமாகப் போயே போய் விட்டான். “இதென்னடா சனியன் பிடித்தவன்!… எனக்கு மேல் சூரப்புலியாய் ஓடி விட்டானே; படுபாவி!”… என்று எண்ணியபடியே, சற்று நேரம் கழித்து, மறுபடியும் வராண்டாவிற்கு வந்து நடுங்கியபடியே பார்த்தான். மறுபடியும் ஒரு சந்தடியும் தெரியவில்லை. “சரி! இனி எதுவானாலும் ஆகட்டும்! கால் முதல் தலை வரையில் கம்பளியை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்து விடுகிறேன்; கண்ணையே திறப்பதில்லை. எந்தப் பிசாசு என்னை என்ன பண்றதோ, பார்க்கலாம்? விபூதியைத்தான் மடியிலேயே வைத்திருக்கிறோமே” என்று எண்ணியவாறு, விபூதியை மறுபடி நெற்றியில் பூசிக் கொண்டு, சாமியைக் கும்பிட்டுப் பிறகு, நீள நெடுகப் போர்த்திக் கொண்டு, கண்ணையும் கெட்டியாய் மூடியபடி படுத்து விட்டான். போர்வை பலமாக இருந்ததேயன்றி, பயமென்னவோ நடுக்கிக் கொண்டே இருந்தது!

21

சிறைச்சாலையிலுள்ள ஸ்ரீதரனைக் கண்டு, சிறைச்சாலை அதிகாரிகளே வியப்புற்று, மூக்கின் மீது விரலை வைக்கிறார்கள். காரணம்: ஸ்ரீதரன், தான் ஒரு விபரீதமான கொலைக் குற்றத்திற்காகச் சிறையிலிருப்பது போல் எண்ணி, ஒரு கடுகளவு கூடக் கலங்காமல், கண்ணீர் விடாமல், சர்வ சகஜ பாவத்துடன், ஒரு விதமான பற்றுதலும் இன்றி, பரிசுத்தமான இதயத்துடன், சதா ஏதோ ஜபிப்பதும், பஜனை செய்வதுமாக இருப்பதைப் பார்த்தால், யார்தான் வியப்புற மாட்டார்கள்?

ஜெயிலர் அன்று காலையில் வந்தார்; “குட்மார்ணிங்கு ஸார்!” என்று ஸ்ரீதரன் வரவேற்றதும், அவருக்கு மிக்க வியப்பாகி விட்டது. 'கீழ்க்கோர்ட்டு விசாரணையிலிருந்து, மேல் கோர்ட்டுக்கு மாற்றிவிட்ட அதிர்ச்சியினால் குன்றிப்

சா—14