உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

158

சின்ன அண்ணனும் கூட வருவீர்களோ என்று தெரிந்து கொண்டு போகத்தான் வந்தேன். வீணாகக் கவலைப்பட்டுக் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதில் பலனேது? சின்ன அண்ணா எங்கேம்மா?”…

என்று சகல விஷயத்தையும் தானே முடுக்கி விட்ட மிஷின் போல் சொல்வதைக் கேட்டு, கமலவேணியம்மாள் தம்பித்துத் திகைத்துப் போய், பதிலே பேசத் தெரியாமல் ப்ரமித்தாள். அதிக துக்கம் வந்தாலும், அதிக சந்தோஷம் வந்தாலும், சிலருக்கு ஒரே மவுன நிலைமையில், வாய் அடைத்து விடுவது சர்வ சகஜம் ! சிலருக்கு ஒரேயடியாய்ப் பொருமித் தள்ளி விடும்படி ஆவேசம் உண்டாகும்! சிலர் தீரமாய் யோசித்து நிதானித்து பதில் பேசுவார்கள்! உலகம் பலவிதமல்லவா?

அதே போல், கமலவேணியம்மாளுக்கு நிலை தெரியாத மவுனமும், ஆனால், ஒரு வித உணர்ச்சியின் வேகமும் உண்டாகி, பரம சந்தோஷத்தையளித்தது. உஷாவை மீண்டும் சேர்த்துக் கட்டித் தழுவி முத்தமிட்டாள்… “கண்மணி! நீ என் வயிற்றிலேயே பிறந்திருக்கும் பாக்யத்தை நான் செய்யவில்லையே என்று வருந்துகிறேன். உன் சகோதரிகளின் விஷயம் தெரியுமல்லவா?…” என்ற போது, கண்ணீர் முட்டி விட்டது. “அம்மா! சகலமும் எனக்குத் தெரியும்; எப்படி என்று கேட்பீர்களோ? சந்திராவின் புருஷன் அகாரணமாய், அனாவசியமாய், என்னைத் தாறுமாறாகத் திட்டியும், இல்லாத பொல்லாத வசை பாணங்களைத் தொடுத்தும், தனக்குத் தோன்றியபடி எல்லாம் கடிதம் எழுதியிருக்கிறார்.” என்றாள்.

கமல:-என்ன ! என்ன! உனக்கா கடிதம் எழுதியிருக்கிறான்? உனக்கும், அவனுக்கும் என்ன சம்மந்தம்?

உஷா:--அம்மா ! திட்டுவதற்கும் வீணாக தூஷிப்பதற்குமே, நாக்கைத் தீட்டிக்கொண்டு காத்திருப்பவர்-