159
சாந்தியின் சிகரம்
களுக்கு காரணமும் சம்மந்தமும் வேணுமா?… தம் வாய்த் தினவைக் கையால் எழுதித் தீர்த்துக் கொண்டு விட்டால், அவர்களின் ஆத்திரம் அடங்கி விடுகிறது போலும். இதனால் எனக்கென்னம்மா குறைவு? கரை காணாத சமுத்திரத்தில், புனித கங்கை, யமுனை போன்ற உயர்ந்த நதிகளின் ப்ரவாகமும் வந்து சேருகிறது. சாக்கடையும் வந்து சேருகிறது. அதனால் சமுத்திரத்திற்கு எங்காவது இழிவு உண்டாகுமா? அல்லது அதை, இந்த அல்ப நீர்கள் கலக்கிப் பாழாக்கி விட முடியுமா? அது போல், கடலின் பரந்த வெளியில் எது வேணுமாயின் வந்து குவிவது போல், நமது அப்பழுக்கற்ற விசால நிலைமையில் எதுவாவது வந்து விட்டுப் போகட்டுமே!… நமக்கென்னம்மா குறைவு?…”
கமல:-கண்மணீ! உனது அதிக உண்மையானதும், ஆழமானதுமான வார்த்தையைக் கேட்டு, நான் எனது அபாரமான துக்க நிலையிலும் பூரிக்கின்றேன்… தான் செய்த குற்றத்தைத் தானே உணரச் செய்வதற்கு ஆயுதம் பொறுமைதான்… என்று பெரிய அண்ணா அடிக்கடி சொல்வான். அந்த அடிப்படை ஞானத்தையே நீயும் கைப்பற்றியிருக்கிறாய். இந்த விஷயங்களில் இன்று இத்தகைய அக்ரம மார்க்கத்தில் சென்றாலும், பிறகொரு நாள் தெரியாமலா போகும்? என்ன காரணத்திற்காக உன்னைத் திட்டியிருக்கிறான்?
உஷா:- தாயே ! அதைப் பற்றி நீங்கள் ஏன் இப்படி மனத்தை அலட்டிக் கொள்ள வேணும்? என்னால்தான், இந்த குடும்பத்திற்கு இத்தகைய விபத்து வந்ததாம். நான் இன்னும் சாகாமலிருப்பது பொறுக்கவில்லையாம்… சரி! சரி! அது கிடக்கட்டும்! நான் கேட்டதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் ?… பெரிய அண்ணாவைப் பார்க்க நீங்கள் வருகிறீர்களா? எனக்கு நேரமாகிறது… சின்னண்ணாவிடம், நீங்கள் இந்த 25 ஆயிரம் ரூபாயையும், அனாதை நிலயத்திற்காகக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறிய-