வை. மு. கோ. 103-வது நாவல்
160
வாறு நோட்டுகளாக உள்ள ஒரு கத்தையை, கமலவேணியின் கையில் கொடுக்கும் போது, தாமோதரன் அங்கு வந்து, “அம்மா! ஒரு நல்ல சமாச்சாரத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்… அட!… உஷாவா? என்னம்மா? சவுக்யமா? எங்கே உன்னைக் காணவே இல்லையே? ஒரு வேளை ஊருக்குப் போயிருக்கிறாயோ என்று எண்ணினேன். அம்மா சவுக்யந்தானே?… என்று களங்கமற்ற நிலைமையில் மிகவும் அன்புடன் கேட்டான்.
உஷா:- உட்காருங்கள் அண்ணா! ஊருக்குப் போனால், சொல்லிக் கொள்ளாமல் போவேனா? ஏதோ கொஞ்சம் வேலையிருந்தது. அதனால் வர முடியவில்லை… என்ன நல்ல சமாச்சாரம்?… அதைச் செல்லுங்களண்ணா!…
கமல:- தாமூ! வேலையாயிருந்ததன் பலன், இதோ உருவாகி இருக்கிறது! இதை உன்னிடம் கொடுக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தாள். நீயே வந்து விட்டாய்… இந்தாம்மா, உஷா! நீயே உன் அண்ணனிடம் கொடுத்து விடு—என்று 25 ஆயிரம் ரூபாயுள்ள பர்ஸை எடுத்துக் கொடுத்தாள்.
உஷா:- (அதைத் தடுத்து) ‘அம்மா ! இதென்ன விளையாட்டு? அண்ணனிடம் நீங்கள்தான் கொடுத்து ஆசீர்வதியுங்கள். நீங்கள் வேறு நான் வேறா? இனியுமா இந்தப் பிரிவினை வார்த்தைகள்?… அண்ணா ! வாங்கிக் கொண்டு, ஏதோ சந்தோஷ சமாசாரம் என்றீர்களே அதைச் சொல்லுங்கள்’—என்று ஆவலே வடிவாய்க் கேட்டாள்.
கமல:- தாமூ! பெரிய அண்ணனின் ஸ்தாபனங்களாகிய அனாதை நிலயமும், தர்ம வைத்யசாலையும் நன்றாக நடப்பதற்காக, உஷா தன் நகைகள், சகலத்தையும் விற்றுப் பணமாக்கி, இதோ, 25 ஆயிரம் ரூபாயாகக் கொடுத்திருக்கிறாள்! இம்மாதிரியொரு த்யாகபுத்தியுடைய சகோதரியை என்னாயுளிலேயே நான் கண்டது