உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

சாந்தியின் சிகரம்

தானே துடிக்கும்! வெளியே செல்ல வழி தெரியாமல், அவஸ்தைப்படும்!…” என்று தனக்குள் பலமாக எண்ணியபடியே, அசைவற்று நின்றிருந்தான். மனமோ ‘பத பத’வென்று துடிக்கிறது. யாரையாவது கூப்பிட்டு விசாரித்தறியலா மென்றாலோ, யாரையும் காணவில்லை. ஏங்கி, எதிர்பார்த்து நிற்கையில், ஒரு வார்டர் சற்று தூரத்தில் போவது தெரிந்து, “ஐயா!… ஐயா!… தயவு செய்து, இப்படி வாருங்கள்; ஒரே நிமிஷம்!” என்று கத்தினான்.

அவன் திரும்பிப் பார்க்காமலே, போய் விட்டான். “உம்!”… என்று ஒரு பெருமூச்சுடன், மறுபடியும் வழியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். இதே வார்டுக்குக் காவலிருக்கும் வார்டர் வருவதைக் கண்டு, வெகு ஆவலுடன் பதறியவாறு, “ஐயா! இப்படி வாங்களேன்; அங்கு என்ன அத்தனை கலாட்டா? இங்கு வந்த கைதிகளைத் தண்டனை செய் து வருத்துகிறார்களா? சற்று சொல்லப்பா?” என்று மனந் தவித்தவாறு கேட்டான்.

வார்:-ஓகோ ! நீங்க இப்படி நெனச்சுக்கிட்டு கேக்கிறீங்களா! தண்டனெ கிண்டனெ அல்லாம் இப்பிடி இந்த எடத்துலே நடக்காது. அங்கே கைதிங்க கட்டெ வெட்றப்போ, ஒருத்தன் கோடாலி தவறி, கால்லெ பட்டுடுச்சு; ரத்தமா ஊத்தி, ஆளு உயிந்துபூட்டான்! அதனாலே, அல்லாருமா சேர்ந்து கூப்பாடு போட்டாங்க; அதான் விசயம்; வேறொன்னுமில்லே” என்று சர்வ சாதாரணமாய், அலட்சியமாய்ச் சொன்னான்.

இதைக் கேட்ட ஸ்ரீதரன், “அப்படியா விஷயம்! ஐயோ பாவம்! எந்த மனிதன் காலில் பட்டதோ? ஏம்பா! ஒடனே, இப்படிப்பட்டவங்களே பாத்து, நல்லா வயித்தியம் செய்வாங்களா? அவனுக்கு அதிகமாக ரத்தம் கொட்டி, உயிர் போய் விட்டால் என்ன செய்வது?…