179
சாந்தியின் சிகரம்
மூன்றாலும் செய்யும் பாவிகளுக்கு, எத்தகைய பயங்கரமான கொடிய நரகம் இருக்குமோ! என்று அரசன் நடுநடுங்கினானாம்…
இம்மாதிரியான நீதிக் கதைகளையாவது நாம் கேட்டு அறிந்தால், ஒரு சிறிதாவது பயம் தோன்றும். கொலை, களவு, முதலிய கொடும் பாவத்தையாவது செய்யாமல், தன்னைத் தான் காத்துக் கொள்ளலாமல்லவா?
பகவானின் நாமத்தைத் தவிர, நமக்கு வேறு துணையோ சார்த்தகமோ! கிடையாது. அவன் திருவடிதான் தஞ்சம் என்பதை உணர்ந்து விட்டால், மனிதனை அந்த நாமமே காத்து ரக்ஷிக்கும். இதுதான் மூன்றாவது தத்துவம்” என்று சொல்கிற போது, மருந்துக்குச் சென்ற ஆள் வந்து விட்டான். உடனே ஸ்ரீதரன் வெகு கனிகரத்துடன் அந்த மருந்தை ஊசி குத்தினான்.
ஸ்ரீதரனின் வார்த்தைகளைக் கேட்டு, மனத்திற்குள் ஒரு விதமான ஆச்சரியமும், இத்தகைய மனிதனின் தலையில் இம்மாதிரியொரு விதியமைந்துவிட்ட பரிதாபமும் கூடி வதைத்தது. இதையே பார்த்துக் கொண்டிருக்கையில், “ஸார்! ஒரு வேண்டுகோள்!” என்று ஸ்ரீதரன் மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டான்.
ஜெயி:-பேஷ்! இப்போதுதான் நானும் சந்தோஷப்படுகிறேன். அப்பீல் செய்வதற்காக…
ஸ்ரீத: (கடகடவென்று சிரித்தான்.) ஸார்! நீங்கள் அப்படித்தான் நினைப்பீர்கள் என்று நான் அப்போதே நினைத்தேன். அப்பீல் செய்வது என்பது இந்த ஜென்மத்திலில்லை. நான் இந்த சிறைச் சாலையை, என்னுடைய லக்ஷ்யத் தவச் சாலையாகவே கருதி இதி-