உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

180

லேயே இருக்க விரும்புவதால், இதிலுள்ள பாவப் பிண்டங்களாகிய ஆத்மாக்களுக்கு, ஹிதோபதேசம் செய்து, அவர்களுக்கு தெய்வ பக்தியை உண்டாக்கி, ஸத் விஷயத்தில் புத்தியைச் செலுத்தும்படி ஒரு ஸேவை செய்ய உத்தேசம். அதனால் நான் பல ஊர்களிலுள்ள சிறைச்சாலைகளிலும் இருக்க ஆசைப்படுகிறேன். தயவு செய்து, என்னை வேறு ஊர் ஜெயிலுக்கு மாற்றி விடும்படி சிபார்சு செய்து உதவினால், அதுவே போதும்.

ஜெயி: - அட ராமா! என்னவோ! ஏதோ என்று எண்ணினேன்! சரி. உமது இஷ்டப்படி அதற்கு ஏற்பாடு செய்கிறேன். உமது தங்கையாமே! உஷாதேவி. அந்தம்மாள் உங்கள் அனாதை நிலயத்தைப் பற்றியும், தர்ம வைத்யசாலையின் விஷயமாகவும் நேரில் சில விஷயங்கள் பேச வேண்டுமாம். அதனால் கட்டாயம் பார்க்க அனுமதி கொடுக்கும்படி எழுதியிருக்கிறார்; உங்கள் சகோதரரும் எழுதியிருக்கிறார். அவர்களுக்கு என்ன பதிலனுப்புவது… என்றார்.

இதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு மிகுந்த குழப்பமும், வருத்தமும் உண்டாகி விட்டது. தன் பிதாவைப் பார்த்தது முதல் எப்படியாவது இந்த ரகஸியச் செய்தியை அம்மாவுக்கு தெரிவித்தால், அம்மா பரம சந்தோஷத்தை அடைவாள். தம்பியும் பூரித்துப் போவான். உயிருடன் இருக்கிறாரோ! இல்லையோ! என்பது கூட தெரியாமலிருக்கும் நிலைமையில் தவிக்கின்றவர்களுக்கு, கைதியாகவாவது உயிருடனிருக்கிறார் என்றால், எத்தனை மகிழ்ச்சி உண்டாகும். அம்மாவின் ஸௌமாங்கல்ய பாக்யத்தைக் கண்டு, அம்மாவின் இதயம் ஆனந்த மயமாய்ப் பொங்குமல்லவா! கைதியாயிருப்-