உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

188

கிறான். கைவிடாமல் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கை இருப்பதால், அவன் சணாரவிந்தங்களை நம்பி, நாங்கள் ப்ரார்த்தனை செய்து, அண்ணனின் பழியைக் களைந்து, அவன் விரும்பும் சாந்தியின் சிகரத்தில் அவரை அமர்த்தி, ரக்ஷிக்கும்படி வேண்டுகிறோம். எத்தகைய அப்பீலோ, மற்ற எதுவுமோ செய்யவில்லை என்பதை அண்ணனிடம் சொல்லியழைத்து வாருங்கள்” என்று நெஞ்சடைக்கும் துக்கத்துடன் வேண்டினான்.

உடனே ஜெயிலர் வார்டரையனுப்பி, ஸ்ரீதரனை அழைத்து வரும்படி உத்திரவிட்டார். சில நிமிஷங்களுக்குள் சாந்தமே வடிவாய், புன்னகை தவழும் கம்பீரமான தோற்றத்துடன் முன்னிலும் தெளிவான நிலைமையில், ஸ்ரீதரன் வருவதைக் கண்டதும், எல்லோரும் அப்படியே ப்ரமித்துத் தம்பித்து செய்வதறியாது நின்று விட்டார்கள். தன் மகன் இளைத்துப் போய், எலும்புக் கூடாய், உலர்ந்து பார்ப்பதற்குப் பரிதாபமாய் வந்து நிற்பான் என்று கமலவேணியம்மாள் எண்ணித் துடிதுடித்த வண்ணமிருந்ததற்கு நேர்மாறாக, வீட்டிலிருப்பதை விட நன்றாகவும், கலக்கமற்ற நிலைமையிலும் இருப்பதைக் கண்டதும், பரிதவிக்கும் உள்ளத்தில், ஒரு தனித்த உணர்ச்சியும், உவகையும் உண்டாகியது. தனக்குள் ஏதேதோ எண்ணியவாறு, ஒரேப்ரமிப்புடன் நிற்கையில், ஸ்ரீதரன் தாய்ப் பசுவைக் கண்ட கன்றுக் குட்டியைப் போல், ஒரே தாவலாகத் தாவியவாறு வந்து, “அம்மா!…” என்று கூவியபடியே, சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்து வணங்கி எழுந்து, சேர்த்துக் கட்டித் தழுவி பின், தம்பியை அப்படியே சிறு குழந்தையைப் போல் சேர்த்து அணைத்துக் கொண்டு, தன்னுள்ளத்தில் பொங்கும் ஆசை வெள்ளத்தை அப்படியே அள்ளி வீசியது போல் காட்டி…