உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

சாந்தியின் சிகரம்

தாமூ! சவுக்யமா? அனாதை நிலயத்தின் வேலையும், தர்ம வைத்ய சாலையின் ஸேவையும் சிறப்பாக நடக்கிறதா;… ஓ, துளஸியா… ராதாவா! அடேடே… இவ்வளவு தூரம் வருவதற்குத் தக்கபடி குணமாகி விட்டதா… தங்கச்சீ; உன் ஸேவை எல்லாம் எப்படி இருக்கிறதம்மா? சின்னம்மா… உங்களை எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்தாப் போல் பார்ப்பது எனக்குப் பரம சந்தோஷமாயிருக்கிறது… இதென்ன அசட்டுத்தனம்… யாரும் கண்ணீர் விடக் கூடாதென்று சொல்லி விட்டுத்தானே வந்தேன். இப்படி கோழையா யிருக்கலாமா!…” என்பதற்குள்… “தம்பீ! உன்னைப் பார்த்த ஆநந்தத்தில், கண்ணீர் தானாக வந்து விட்டது. நாங்கள் அழவில்லை. நீ போய் விடாதே தம்பீ!” என்று உஷாவின் தாயார் இதய பூர்வமாய்க் கூறினாள்.

இதைக் கேட்ட ஸ்ரீதரன் கடகடவென்று நகைத்தான். அந்தச் சிரிப்பொலியிலே, த்யாகத்தின் கம்பீரமும், அமைதியின் அஸ்திவாரமும், பக்தியின் ஆமுமும், சாந்தியின் சிகரத்தில் நிம்மதியாய் நிற்கும் பெருமையும், வெகு நன்றாகத் தெரிந்தது… “உம்… என்னைப் பார்ப்பதா ஆநந்தம். அந்த ஆகந்தத்திலா கண்ணீர் பெருக்கு… அடாடா! இத்தகைய உறுதியான ப்ரேமையை—ஆழமான அன்பை, சாக்ஷாத் ஜகத்ரக்ஷகன் மீது வைத்திருந்தால், எத்தனை ஸார்த்தகமும், இகத்திற்கும், பரத்திற்கும், ப்ரயோஜனமும் உண்டாகும். இன்று இருந்து, நாளை அழிந்து, நாற்றக் குப்பையாய், நசித்துப் போகக் கூடிய மாமிஸப் பிண்டத்தினிடத்திலா இத்தனை அன்பு… இந்த தத்துவத்தைத்தான் நம் ஜனங்கள் அடியோடு உணராது, பாசமாகிய பாசியிலேயே புரண்டுத் தவிக்கிறார்கள்… இதைத்தான் பட்டினத்து அடிகள் செத்த பிணத்தருகே சாகும் பிணம் குந்தி கத்துதைய்யோ” என்று கதறிப் பாடி இருக்கிறார்.