வை.மு.கோ. 103-வது நாவல்
190
சரி… நீங்கள் வந்துள்ள சிறிது நேரத்தில், நான் ப்ரஸங்கம் செய்து நேரத்தை வீணாக்குவதாக, உங்கள் இதயநாதம் தாப கீதத்தை எழுப்புகிறது… அம்மா!… வந்துள்ள சற்று நேரமும் பேசாமல், மவுனம் சாதிக்கிறாயே அம்மா. தம்பி இப்பொழுது எப்படி இருக்கிறான் பார்த்தாயா! இந்த மகானுபாவரின் தயவால், நான் இப்பொழுது கம்பிக்கு வெளியில் பேசுகிறேன்… தம்பீ! இரண்டு ஸ்தாபனங்களுக்கும், பணத்திற்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்…உஷா… ஏனம்மா பதுமை போல் நிற்கிறாய்… ராதா! உன் உடம்பு நன்றாகக் குணமாகி விட்டதா… ஸார்… இந்தப் பெண்ணால் எனக்குக் கிடைத்தற்கரிதான ஒரு புகழும், வெற்றியும் கிடைத்தது. பாவம். அனாதை, திக்கற்ற பரதேசி என்றால் தகும், ப்ரமாதமான உடம்புக்கு வந்ததால், என்னுடைய ஆஸ்பத்திரியில் யாரோ தெருவோடு போகிறவர்கள் கொண்டு போட்டார்கள். மூளையில் பலத்த கோளாறு உண்டாகியிருந்தது. மேல் நாட்டாரைப் போல், நாமும் மூளையில் ஒரு ஆபரேஷன் சிகிச்சை செய்து பார்க்க வேண்டும். அனாதைப் பெண்தானே, இருந்தாலும், இறந்தாலும் கேள்வி இல்லை. அந்த சிகிச்சையின் வெற்றி பகவானின் கையிலிருக்கிறது. அவர் விட்ட வழியாகட்டும்! என்று துணிந்து சிகிச்சை செய்தேன். பகவான் வெற்றியைக் கொடுத்தார். பாவம்! நிர்க்கதியான இப்பெண்ணை நான் தர்ம வைத்ய சாலையிலேயே வைத்து, மேலும் சிகிச்சைகள் கொடுத்து வருகையில்தான், இக்கதி வந்து விட்டது. எனக்கு பதில் இதோ இந்த லேடீ டாக்டர் பார்த்துக் கொள்கிறார்கள்” என்று தானே முன் கூட்டித் தெரிவித்தான்.
இதைக் கேட்ட ஜெயிலர், மேலும் வியப்பும், ஸ்ரீதரனிடம் நன்மதிப்பும் கொண்டு ப்ரமித்துப் போனார்.