197
சாந்தியின் சிகரம்
படப்புடன் துடிப்பதையும் கண்டும், கேட்டும் தாமோதரனும், உஷாவும் ஒரே துள்ளு துள்ளுகிறார்கள். “என்னம்மா… நம்மப்பாவா சிறையிலிருக்கிறார்… அதையா, உன் காதோடு அண்ணா தெரிவித்தது… என்ன ஆச்சரியம் … அம்மா! அவரைப் பார்க்க முடியாதா… அவருடைய விஷயம் வேறு ஒன்றுமே சொல்லவில்லையா…” என்று பதறியவாறு கேட்டார்கள்.
உஷாவின் தாயார் எதுவும் பேசவில்லை. படத்தைத் தொட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக, அப்படியே சோகப் பதுமை போல், நின்று விட்டாள். அவள் குலத்தில் தேவதாசியானாலும், எத்தனை ஆழமான அன்பு வேரூன்றிப் போய், இதயத்தில் பாய்ந்திருக்கிறது. என்ன ஆச்சரியம் என்று சில வினாடிகள், கமலவேணியே திகைத்தாள். தான் அக்னி சாக்ஷியாகத் தாலி கட்டிக் கொண்ட உயர் குலத்துப் பெண்ணாக இருப்பினும், தாசிக்குள்ள அளப்பரிய அன்பின் ஆழம், விசித்ரமாகவன்றோ என்னையும் விஞ்சிய நிலைமையில் இருக்கிறது! என்று தனக்குள் எண்ணி, அந்த வேகத்தில் அந்தம்மாளை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொண்டாள். “தங்கச்சீ! உன்னுடைய பக்திக்கும், கரை கடந்த அன்பின் ஆழத்திற்கும் நான் கூட தோற்றவளாகி விடுவேன் போல் தோன்றுகிறது. எத்தனை ஆர்வத்துடன், நீ அவரிடம் உயிரையே வைத்திருந்தாய் என்பதை இப்போது நான் அறிகிறேன். நான்தான் உரிமைக் குகந்தவள் என்கிற இறுமாப்பில், நான் ஆதியில் அவரைத் திட்டியது கூட உண்டு. எந்த தாசி வலையிலோ விழுந்து, நாசமாகிறாரே என்கிற அங்கலாய்ப்பினால் தாசிகளையும் திட்டுவேன். கேவலமான ஒரு தாசிக்கு அன்பு என்பதே இருக்க முடியாது. அவள் இதயம் பசையற்ற பாலைவனம் போன்றதாகும்;