உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ.103-வது நாவல்

198

கொடிய கரடி, புலிகள் வாழும் கானகம் போன்றதாகும். அட்டையைப் போல், ரத்தத்தை உறிஞ்சும் துஷ்ட ஜந்துவின் ரகத்தைச் சேர்ந்தவர்களாகும் என்றெல்லாம் நான் எண்ணி திட்டியதுண்டு. ஆனால், இன்று என் கண்களால், உன்னுடைய அதி அத்புதமான ஆழ்ந்த அன்பைக் காணும் போது, என்னுள்ளம் என்னையே தோற்றுப் போனவள் என்று இடித்துக் காட்டுகிறது. விஷப் பூண்டு உத்க்ருஷ்டமான இடத்திலும் முளைக்கிறது; உதவாக்கரை இடத்திலும் முளைக்கிறது. அது போல் உத்தமர்கள் எந்த இடத்திலும் உதிக்கிறார்கள். சுந்தராம்பாள்! உன்னுடைய அன்பு வெள்ளத்தில், நாங்கள் இன்று திளைகின்றோம்” என்று தன் போக்காகப் பேசிப் பூரித்தாள்.

சுந்தராம்பாள் எதுவுமே பேசவில்லை. “அக்கா! உலகம் பலவிதமல்லவா! தாசி வகுப்பில் பிறந்து திலகமாய் விளங்குகின்ற எத்தனையோ பெண்மணிகளின் சரிதையை நாம் படித்து இன்புறுகிறோம். அதாவது ஏட்டுச் சுவடிதானே எனலாம். இப்பொழுது நாம் கண்ணால் பார்க்கிறோம். தாசி குலத்தில் பிறந்த ரத்னப்ரபா என்ன (பவித்திரப் பதுமை என்ற நவீனத்தின் கதாநாயகி) நிர்மலாதேவி என்ன (ஜீவியச் சுழலின் கதாநாயகி) அம்புஜம் என்ன (ராதாமணி நவீனத்தின் நாயகி), இவர்களைப் போல் உத்தமிகளை இன்று ப்ரத்யக்ஷமாய்ப் பார்க்கிறோமே, இதுவே போதாதா! இத்தகைய மாணிக்கங்களினால்தான், எங்கள் ஜாதியில் சிலராவது அழுக்கு விலகி, தூய்மை உண்டாகி, அறிவு பரவி, மானத்துடன் பிறர் கொண்டாடும் முறையில், வாழ்க்கை நடத்துகிறார்கள். அந்த முறையில், தாசி குலத்தையே மாற்றியமைத்துத் தொண்டாற்றவே, நானும் ஆதியில் கங்கணம் கட்டியும், என் விதி அதைத்