199
சாந்தியின் சிகரம்
தடை செய்து, என் எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டது. என் ஒரே ஒரு கண்மணிக்காக, நானே ஆடவும், பாடவும், பணம் சம்பாதிக்கவும் செய்து விட்டது ஒரு பெருங்குற்றந்தானே. தாசிதானே! சினிமாவில் ஆடினாள் என்று உலகம் சொல்லி விடுமல்லவா!” என்று வருத்தத்துடன் கூறினாள்.
இதற்குள், உஷாவும், தாமோதரனும் இதே விஷயத்தைப் பற்றி பலமாகப் பேசி யோசித்து, ஒரு முடிவு செய்து கொண்டு, கமலவேணியிடம் ஓடி வந்து, “அம்மா! நாங்கள் ஒரு யோசனை செய்திருக்கிறோம்” என்றார்கள். உஷாவே முந்திக் கொண்டு, “அம்மா! அம்மா! நான் சொல்கிறேன் கேளுங்கள். அண்ணா என்னவோ கேஸ் விஷயமாய், நாம் எந்த ப்ரயத்தனமும் செய்யக் கூடாதென்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டதால், அந்த விஷயத்தில் நாம் ப்ரவேசித்தால், அவருக்கு கோபம் வரும். இன்று புதிதாகக் கேள்விப்பட்ட விஷயம், நம்முடைய குடும்பத்திற்கே முக்யமானதல்லவா! அப்பாவும், கொலைக் குற்றத்திற்காகவே தண்டிக்கப் பட்டிருப்பதால், அந்த வழக்கு விஷயமாய் நாம் ஆராய்ச்சி செய்து, அதுவே பொய்யா, மெய்யா என்று இத்தனை வருஷம் கழித்து கண்டு பிடித்து விட்ட பெருமையுடன், அவரையும் விடுதலை செய்யலாம். அந்த வ்யாஜமாக அண்ணன் வழக்கையும் ஆராயலாம். என்னதான் நம் பிதா கொடிய துஷ்டராய், துன்மார்க்கராயிருப்பினும், கையினால் கொலை செய்திருக்கவே மாட்டார் என்பதுதான் என் துணிவு…”
என்பதற்குள், சுந்தராம்பாள், "உஷா! இந்த யோசனையை நான் விரும்பவில்லை. அக்கா! நீங்கள் இதை ஆமோதிக்கிறீர்களா! அவரிடம் பல விதத்திலும் நெருங்கிய நமக்கல்லவா, அவருடைய மூர்க்கத்தனத்-