உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

200

தின் கொடுமையும், விபரீதமும் தெரியும். அந்த அடங்காத ஆத்திரத்தில், அவர் எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

என்னுடைய சொந்த மாமன் வ்யாபார நிமித்தம் வெளியூருக்குச் சென்று, பல வருடங்கள் அங்கு தங்கி விட்டார். அவர் பிறகு, தாய் நாடு திரும்பிய போது, என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போதுதான் நான் இவரை மணந்து, இன்ப வாழ்வு உலகில் ப்ரவேசித்த சமயம். என் தாய் மாமனை நான் வெகு சிறு ப்ராயத்தில் பார்த்தது கூட நினைவில்லை. அவர் மிகவும் அழகாய், கம்பீரமாயிருப்பார். அவர் என்னுடன் வெகு அன்பாக உள்ளவர் என்னைப் பார்க்க வந்தார்; அவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் வந்தார். வந்தவருக்கு என் மாமனை அறிமுகப்படுத்த, நான் வெகு உத்ஸாகத்துடன் ஆரம்பிப்பதற்குள், அவரை யாரோ அன்னிய புருஷன். வித்யாஸ புத்தியுடன் வந்திருக்கிறார். அவரிடம் நான் கள்ளத் தனமாய்ப் பழகுகிறேன்… என்றெல்லாம் கணக்கு வழக்கற்ற சந்தேகங்களுக்கும், குயுக்திக்கும் இதயத்தில் இடத்தைக் கொடுத்து, எதையும் தீர, ஆற விசாரிக்காமல், ம்ருகத்தை விட மோசமான ஆவேசத்தையடைந்து, என்னை அவரெதிரில் தாறுமாறாகத் திட்டி, அடித்ததுடன் அவர் மீது பாய்ந்து, மென்னியையே பிடித்துக் கொல்ல முயற்சித்த பயங்கரத்தை, இப்போது நினைத்தாலும், என்னுள்ளம் நடுங்குகிறது. எனக்கு எப்படித்தான் யானை பலம் வந்ததோ, தெரியவில்லை. இவரை இழுத்து வெளியில் தள்ளி விட்டு,