வை. மு. கோ. 103-வது நாவல்
202
கொண்ட நிலைமையில்தானே வருவோம். ஆகையால், இதைப் பற்றிப் பேசாமலிருப்பதுதான் சகல அம்சத்திற்கும் நன்மையாகும். அண்ணனே ஒரு கதை போல், விஷயம் எழுதியனுப்புவதாகச் சொல்லி இருப்பதால், அதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கலாம். அதை விட்டு, நாம் வேறு வழியில் செல்வது தகாது. உஷா! நீ அவசரப்பட்டு, எதையும் செய்யாதேம்மா… தாமூ! நீயும் இது விஷயத்தை, நம்மைத் தவிர பிறருக்குத் தெரிவிக்கவே வேண்டாம். ஆண்டவனிருக்கிறன். நம்மைக் கை விட மாட்டான்.”
என்று பெரிய ப்ரஸங்கம் போல் சொல்வதைக் கேட்டு, கமலவேணி பூரித்துப் போனாள். விஷயமே அறியாத உஷாவும், தாமோதரனும் தாம் ஏதோ பெரிய காரியத்தை ஸாதித்து விட்டதாக எண்ணி, அபரிமிதமான உத்ஸாகத்துடன் தெரிவித்த காரியம், உடனே தோல்வியடைந்து விட்டதால், மன அதிர்ச்சி உண்டாகி, ஒரு மாதிரியாகி விட்டது. பிறகு ஆழ்ந்து யோசித்துப் பார்த்த பிறகுதான், சுந்தராம்பாள் சொல்வது முற்றிலும் சரியானது என்று தோன்றியது. மறுபடியும் கமலவேணியம்மாள், சுந்தராம்பாளின் அன்பைக் கண்டு வியந்தாள்.
“அம்மா! அண்ணனின் மனங் கோணாதபடி நாம் வேலை செய்து, எப்படியும் அண்ணன் நிரபராதி என்பதைக் காட்ட வேண்டும். அதற்கு எந்த வழியில் வேலை செய்யலாம்” என்று உஷா வருத்தத்துடன் கேட்டாள்.
“கண்ணூ! மனித ப்ரயத்தனம் என்பது ஒரு வ்யாஜமேயன்றி, பகவானின் நாமத்தை விட வேறு ஒரு மார்க்கம் இருக்கிறதா! அதைத்தான் நன்றாக விளக்கி, பாமர மக்களின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து, பக்திக்