203
சாந்தியின் சிகரம்
கனலை வளரச் செய்யும் பொருட்டு, ஸ்ரீபுரந்தரதாஸர் ஒரு பாட்டில், நீ எதற்கு? உன் பிருதுகள் எதற்கு? உனது அட்டகாஸங்கள் எதற்கு! உன்னுடைய நாமம் ஒன்றே எனக்குப் போதும்! என்று ஆணித்தரமாய்ப் பாடி இருக்கிறார். அந்த வழியை நாமும் பின்பற்றி, சதா நாம பஜனை வேண்டுவோம். அந்த திவ்ய நாமமே நமக்குத் துணை புரிந்து, தனது சக்தியையும், பக்தியின் சிறப்பையும் காட்டி, அண்ணனுக்கு அவன் விரும்புகிறபடி, சாந்தியின் சிகரத்தில் ஒரு தனி பீடத்தைக் கொடுத்து, ரக்ஷிக்கட்டும். ஆகையால், பூஜை, பஜனை, த்யானம் முதலியன செய்து நாமும் க்ருதார்த்தமடைவோம், இதைத் தவிர, வேறு மார்க்கமே இல்லை. நாம் கனவில் கூட நினைக்காத விதம், அந்தக் கடவுள் உன் பிதா உயிருடனிருப்பதைக் காட்டி, எங்களுக்கு ஸௌபாக்யத்தை வளரச் செய்தாரே, அவர் இதையும் செய்யாமல் விட மாட்டார். ஆகையால் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டாம்!” என்றாள்.
அதுவே எல்லோருக்கும் சரி என்று தோன்றியதால், அதையே எல்லோரும் ஆமோதித்தார்கள். அச்சமயம், டெலிபோன் மணி அடித்தது. உடனே உஷாவே ரீஸீவ் செய்தாள். “ஹல்லோ… யார் பேசறது.. நான் உஷாதேவி… ஆமாம். தாமோதரன் வீடுதான், அவர் இதோ இருக்கிறார். நீங்கள் யாரு… அம்புஜமா… நாயுடுவின் மகளா! வெகு சந்தோஷம் ஸிஸ்டர்! என்ன விசேஷம்… என்ன என்ன அண்ணனின் வழக்கில் அனுகூலமான விஷயங்கள் கிடைத்திருக்கிறதா… அடாடா! இதைக் கேட்கும் போதே, மனது துள்ளிக் குதித்துத் தாண்டவமாடுகிறது ஸிஸ்டர்! சற்று இருங்கள். அம்மா, பெரியம்மா… சின்னண்ணா.. அண்ணாவின் வழக்கில் அனுகூலமான விஷயங்கள் கிடைத்திருக்கிறதாம்.ஸ்ரீ அம்-