உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

சாந்தியின் சிகரம்

விட்ட தந்தையைப் பார்த்துத் தன் கையினாலேயே சிகிச்சை செய்யும் பாக்யம் கிடைத்த ஒரு சந்தோஷமாக இருக்குமா?

இன்று ஒரே சமயம் நம் பந்துக்களையும், உயிர் சினேகிதர்களையும், உதாரணமாகக் கூறக் கூடிய உஷாதேவியையும், என் தொழில் முறையில் புதிய ஜால வெற்றியைக் கொடுத்த ராதாவையும், ‘இவன் கூட திருந்துவானா?’ என்று இரவு பகல் ஏங்கிய தம்பியை, இன்று த்யாகப் பிழம்பாய் காணும் உத்தமனை… ஆக பல பேர்களையும் ஒருங்கே பார்த்த சந்தோஷம் கட்டு மீறி கரையறுத்துக் கொண்டு கும்மாளமிடுகிறதா! என் தந்தையின் ரகஸியமறிந்ததும், என் தாயாரின் உள்ளம் பூரித்த பூரிப்பைக் கண்டு என்னிதயமும் எக்காளயிடுகிறதா! ஒன்றுமே புரியவில்லையே! எதற்காக இத்தகையப் புதிய ஆநந்த உணர்ச்சி?” என்று தனக்குள் பலபலவாறு எண்ணியபடியே, அங்குமிங்கும் உலாவினான்.

ஜெயில் டாக்டர் வெளியூர் போன இடத்தில், அவரே பலமான ஜூரங் கண்டு படுத்து விட்டதால், ஸ்ரீதரனையே அடிபட்ட நோயாளிக்கு வைத்யம் செய்வதைத் துடர்ந்து செய்யச் செய்தார்கள். ஒரு கொலைகாரக் கைதிக்கு, இன்னொரு கைதி வைத்யம் செய்வதை, அங்குள்ள பலரும் குசமசவென்று, தம் தம் மனம் போனபடி எல்லாம் பேசிக் கொண்டார்கள். நோயாளிக்குக் கட்டு கட்டுவதற்காக, வார்டர் ஸ்ரீதரனை அழைத்துச் சென்றான். டாக்டர் என்ற முறையில் செல்கையில், ஸ்ரீதரன் கைதி உடையின்றி, சாதாரண உடையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டான். அப்போது நோயாளி சற்று தெளிந்த நிலைமையில் பாதை தாங்காமல் முனகிக் கொண்டிருந்தான். ஸ்ரீதரனுக்கு மட்டும்,கடவுளே! இவ-