உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

206

ருக்கு நினைவு வராதிருந்த வரையில், நான் நிம்மதியாக வைத்யம் செய்தேன். இப்போது ஏதோ மாதிரி தோன்றுகிறதே! இத்தனை வருஷத்திற்குப் பிறகு, என்னை அடியோடு அடையாளம் தெரிந்து கொள்ள மாட்டார் எனினும், புத்திர வாத்ஸல்யம் என்கிற சக்தி இந்த ரகஸியத்தைக் காட்டிக் கொடுத்து விடுமோ! என்கிற பயம் வேறு பாதிக்கிறதே! எங்களுடைய ரகஸியத்தை வெளியிடாது காப்பாற்று!” என்று வேண்டியபடியே நோயாளியினருகில் சென்று, “என்ன! பெரியவரே! வலி எப்படி இருக்கிறது. நன்னா தூங்கினயா!” என்று கேட்டபடியே, முதலில் நாடியைப் பிடித்துப் பார்த்தான்.

எத்தனைதான் த்யாக அக்கினியாயிருந்த போதிலும், “ஐயோ! என் பிதாவை இந்த கதியிலா பார்க்க வேணும். இப்படியா விதி அமைந்தது… அப்பா! என்று வாயாரக் கூப்பிட்டு விடலாம் போலிருக்கிறதே, என்ன செய்வேன்? மனமே! சாந்தியை அடைந்து, சமாதானமாயிரு” என்று தனக்குள் எண்ணி தேற்றியபடியே நோயாளியைப் பார்த்தான்…

அவன் முகத்தில் தன் தம்பியின் சாயல் அப்படியே தத்ரூபமாய்ப் படர்ந்திருப்பதைக் கண்டு, உள்ளுக்குள் ஒரு விதமான சந்தோஷத்தையடைந்து, தகப்பனாரைத் தடவிக் கொடுத்தான். நோயாளி டாக்டரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு… “உம்… இந்தப் பாவியைத் தடவிக் கொடுப்பதற்குக் கூட, இந்த உலகத்தில் ஒரு மனிதர் இருக்கிறாரா என்று நான் ப்ரமிப்படைகிறேன்… பழைய டாக்டருக்கு நான் கொலைகாரன் என்பது வெகு நன்றாகத் தெரியும், நீங்கள் புதிய டாக்டரல்லவா! நான் சாதாரணக் கைதியல்ல என்பதை நானே சொல்கிறேன் டாக்டர் நான் கொலைகாரன், கொலை குற்றவாளி! என்னை எதற்காகப் பிழைக்க வைத்-