வை.மு.கோ.103-வது நாவல்
210
தோரணையில் தான் பேசி இன்புறவே, இவன் உள்ளம் பறந்தது. “அப்பா! இதோ பாரு, உன் வார்த்தையின் நியாயப்படியே பேசுகிறேன். பசி எடுத்தவனுக்கு ஆகாரமும், வெயிலில் தவிப்பவர்களுக்கு நிழலும், நோயாளிகளுக்கு வைத்தியனும், மருந்துகளும், அனாதைகளுக்கு ஆதரவளிக்கும் தயாளர்களும் வேணுமேயன்றி, இதற்கு எதிர் முறையாய், புறம் பட்டதற்குத் தேவையில்லையல்லவா?
இந்த இடத்தில் வந்துள்ளவர்களுக்குத்தானேப்பா கண் திறக்கச் செய்துத் தாங்களும் மனிதர்கள்தான், மிருகமல்ல என்பதை உணர்த்த வேண்டும்.ஏதோ வைத்தியம் செய்தபடியே, இதையும் செய்தால் நல்லதல்லவா! இங்குள்ள டாக்டர் ஊருக்குப் போயிருப்பதால், நான் இங்கு தற்காலிகமாய் வந்திருக்கிறேன். நான் ஊருக்குப் போய் விடுவேனப்பா… இந்த சிறையில் உனக்கு வைத்யம் செய்யவே, நான் வந்தது போலாகி விட்டது. ஆமாம் நீயாகக் காலில் கோடாலியைப் போட்டுக் கொண்டதாகச் சொன்னாயே, எதற்காகப்பா?”
இதற்குள் நோயாளியின் கால்களுக்கு மருந்து போட்டுக் கட்டியாயிற்று. ஊசி குத்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கையில், நோயாளி மீண்டும் பேசத் தொடங்கி, “உம் நான் நினைப்பதும், செய்வதும் எதுவுமே பலிக்கிறதில்லையே டாக்டர்! எங்கிருந்தோ நீங்கள் வந்து முளைத்திரா விட்டால், ஏதோ ஒருவாறு பலித்திருக்கலாம். நான் என்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் நீங்கள் ஏதேதோ பேசி, என்னுடைய இருண்ட இதயத்தில் ஒரு ஜோதியை எழுப்பினீர்களே! அதனால், என்னுடைய எண்ணமே மாறி விட்டது. என்னுடைய குப்பைத் தொட்டி புராணத்தை, இனி வாயினால் சொல்லவும் வெட்கப்