211
சாந்தியின் சிகரம்
படுகிறேன். நான் பாவி, த்ரோகி, கட்டிய… பெற்ற மக்களை நிர்கதியாக்கி விட்டுச் சிற்றின்பச் சேற்றில் விழுந்து, புரண்டு நோயாளியாகி, படாத பாடுபட்டு, எல்லோராலும் வெறுக்கப்பட்டு, கேவலம் நாயைப் போல், எனக்கே நான் காணப்பட்டேன். அதனால், என்னையே நான் வெறுத்துக் கொண்டு, என்னையும் மீறி, என் வாழ்நாளில் நானே வியக்கும்படி ஒரு த்யாகத்தைச் செய்து, கொலைகாரக் கைதியாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.”
“என்ன! என்ன! த்யாகத்தைச் செய்து, நீயே மாட்டிக் கொண்டாயா! அதென்னப்பா! நிரம்ப ஸ்வாரஸ்யமான கதை போலிருக்கிறதே. இப்போதே தயவு செய்து சொல்லப்பா… நானும் போக வேணும்.” என்று கூறி விட்டு, ஜெயிலரின் முகத்தைப் பார்த்தான்.நேரமாகி விட்டதென்று முகத்தைச் சுளிக்கிறாரா! அல்லது பேசாமலிருக்கிறாரா என்று அறியவே, அப்படிச் செய்தான். ஜெயிலர், ஸ்ரீதரனிடத்தில் அளவு கடந்த மதிப்பு வைத்திருப்பதால், அவனிடம் வெகு நம்பிக்கையே கொண்டு, “ஸார்! இந்த மனிதனின் பொய்ப் புராணங்களை, இந்த ஜெயிலின் சுவர் முதல் கம்பிகள் வரை கேட்டு வெறுத்தாயிற்று. ஆனால், ஒருவரிடம் சொல்லியபடி ஒருவரிடம் சொன்னதில்லை. உம்மிடம் என்ன வருகிறதோ வரட்டும், கேளும் கேளும்!” என்று குத்தலாகக் கூறி, ஏளனமாய் நகைத்தார்.
நோ:- அவர் சொல்வது ரொம்ப சரி டாக்டர்| எனக்கு நல்ல பயன்படக் கூடிய வழியில், கற்பனைகளை உருவாக்கி, உலகிற்கு உதவும் பாக்யமில்லை எனினும், கற்பனையில் மிக மிக ருசி உள்ளவன். நான் இங்கு கணக்கற்ற கைதிகளின் சரித்திரங்களைக் கேட்ட பிறகு, அந்த கற்பனை பின்னும் விஸ்தாரமாய் வளரத் தொடங்-