உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

212

கியது. நான் ஒரு ஆசிரியனாக இருந்தால், என் சரிதையையே, ஒரு பெரிய கதைப் புத்தகமாய் எழுதி விடலாம். வெறும் ம்ருக மனிதன்… அல்ல; ஆசைக்கு அடிமையாகி, அவதியுற்ற மனிதன்… அதனால்தான், என் மனம் போனபடி பொய் சொல்லி, அதில் ஒரு த்ருப்தியடைந்தேன். இப்போது சொல்லப் போவது பொய்யேயல்ல! ஸத்தியமான வார்த்தைகளாகும், அப்பழுக்கற்ற உண்மையாகும். சுருக்கமாய்ச் சொல்கிறேன்… என்னுடைய ஆபாஸ நடத்தையினால், என்னையே நான் நாய் போல் வெறுத்தேனல்லவா! அச்சமயம் மகா உத்தமியான என் மனைவி, மக்களைப் பார்க்கவும் அவர்களிடம் மன்னிப்புக் கோரவும் நான் ஆசைப்பட்டேன்.

ஆனால், என் மனைவி எப்படியோ சாமர்த்தியமாய், என்னுடைய குழந்தைகளைப் படிக்க வைத்து, முன்னுக்குக் கொண்டு வர ப்ரயத்தனப் படுவதையும், பெண்களுக்கு வரனும் தேடி, விவாகத்தைச் செய்து விட நினைப்பதாயும் அறிந்தேன். கெட்டு அலைந்த மகா பாவி எங்கேயோ கண் காணாது ஓடி விட்டான்; துலைந்து விட்டான் என்கிற ஒரே எண்ணத்தில் என்னை மறந்தும், என்னால் ஏற்படக் கூடிய களங்கத்தை நீக்கியும், முன்னுக்கு வர ப்ரயத்தனப்படும் சமயம், நான் ஊரே வெறுக்கக் கூடிய நிலைமையில் அங்கு போனால், மிக மிக விபரீதந்தான் உண்டாகி விடும்; குழந்தைகளின் எதிர் கால வாழ்க்கை பாழாகி விடும். என்னால் ஒரு நிமிஷமாவது இன்பமடையாத குடும்பத்தில், ஆயுள் பூராவும் ஒரு களங்கத்தை உண்டாக்கிப் பாழாக்க வேண்டாம் என்கிற ஒரு ஆவேசமும், உறுதியும் எப்படியோ வந்து விட்டது. என் மூத்த மகனாகிய ஸ்ரீதானை ஒரு முறை பார்க்க மனம் துடித்தது.