239
சாந்தியின் சிகரம்
இங்கு கண்ணாரப் பார்த்ததே, என் மனது நிம்மதியான சாந்தியின் சிகரத்தில் அமர்ந்து விட்டது,’ என்று கூறி விட்டு ஸ்ரீதரனை நோக்கி, ‘என் கண்ணே! கமலவேணி சவுக்யமா? இந்திரா, சந்திரா, தாமு எல்லோரும் சவுக்யமா?’ என்று கேட்டு, அவனை மீண்டும் தழுவிக் கொண்டார்.
அம்பு! அந்தக் காட்சி என்னால் மறக்கவே முடியாது. அத்தனை உருக்கமாயிருந்தது. மூவரும் ஏதேதோ பேசிப் பின், கடைசியில் ஜெயிலர் இவரை எப்படியாவது விடுதலை செய்து, அனுப்பி விடுவதாயும், அவர் மறுக்காமல் வெளியே வந்து விடுவதாயும் தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீதரன் ஒரே ப்ரமிப்புடன் அப்படியே பதுமை போலாகி விட்டார். வெகு சீக்கிரத்தில் விடுதலையாகி விடும். என்று நான் சொல்லி விட்டு, இந்த ரகஸியம் நம் மூவரைத் தவிர வேறு யாருக்குமே தெரிய வேண்டாம். என்று சொல்லி விட்டு, நான் நேரே போலீஸ் கமிஷனரிடம் பேசி விட்டு, சர்க்காரிடம் எல்லாவற்றையும் தாக்கல் செய்து விட்டு, ஓடோடி வந்தேன். எப்படி இருக்கிறது கதை பார்த்தீர்களா! அனேகமாய் இன்னும் வெகு சீக்கிரத்திலேயே, ஸ்ரீதரன் வந்து விடுவார். அடுத்த மாதம் புது வருஷமல்லவா? அதை முன்னிட்டு அவரும் வந்து விடலாம்” என்றார்.
இந்த அதி அத்புதமான விஷயத்தைக் கேட்டதும், எல்லோரும் அப்படியே ஆனந்த மயமாய்க் கூத்தாடினார்கள். பின்னும், வெகு நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, எல்லோரும் விடை பெற்றுச் சென்றனர். எல்லோருடைய இதயமும், நாயுடுவையும், அம்புஜத்தையுமே வாழ்த்தியது.