உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


29

தென்ன இது, மேரியை இன்னும் காணவில்லையே! அவள் எங்கு சென்றிருப்பாள். இத்தனை நாட்களாக என்னை விட்டுப் பிரியாமல், நம்பிக்கையா யிருந்ததனால்தானே, நேற்றிரவு அவளைக் கூடவும் அழைத்துச் சென்று விட்டேன். எங்கு போயிருக்கக் கூடும்,’ என்று எண்ணியபடியே, அந்த வெள்ளை மாது உள்ளுக்குள்ளேயே தவிக்கிறாள். பட்ளரை விசாரிக்கலாமென்று கூப்பிட்டாள். அம்புஜத்தின் கணவனாகிய பட்ளர், தனக்கு ஒன்றுமே தெரியாது. அவள் யாரோ என்னவோ என்று திட்டமாகக் கூறி விட்டான். வெள்ளை மாது மிக்க பயத்துடன், மேரியின் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில், அன்று இரவு மேரி மிகுந்த பயத்துடன், நடுநடுங்கியவாறு வேர்க்க, விறுவிறுக்க கை கால்கள் உதற, முகம் வெளிர் தட்டி, விகாரமடைய அலங்கோலமான நிலைமையில் வந்து சேர்ந்தாள்.

இவளைக் கண்ட வெள்ளை மாது மிகுந்த கோபத்துடன், “இதென்ன செய்கை! ஒரு நாள் பூராவும் என்னை விட்டு விட்டு நீ சொல்லாமல், கொள்ளாமல் எங்கு போனாய்? நேற்றுதான் நம்பிக்கையாயிருப்பதாய், ப்ரமாணம் செய்து கொடுத்த நீ இன்றே என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? எங்கு சென்று விட்டாய்? ஏன் என்னிடம் சொல்லவில்லை? சொல்லாமல் சென்றதுமன்னியில் பயப்படுவது போல், நடிக்கிறாயே, நடிப்பு!” என்று அதட்டினாள.

உடனே மேரி, வெள்ளை மாதின் கைகளைப் பிடித்துக் கொண்டு “தாயே! மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்கு நம்பிக்கை த்ரோகம் செய்யவில்லை. என்