உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253

சாந்தியின் சிகரம்

உச்சி முகர்ந்து, ஆசீர்வதிக்கப் பதைபதைக்கிறார்கள். உமது சகோதான் பரதன் தவித்தது போல், அண்ணாவின் வரவுக்காகத் தவிக்கிறார். இனி தாமதம் செய்வது தகாது. நீங்கள் சிரஞ்சீவியாய், லக்ஷிய புருஷராய் வாழ, பகவான் அருள் புரிவானாக,” என்று வாழ்த்திப் பின், பெரிய கதவும் தாண்டி, ஸ்ரீதரன் செல்லும் வரையில் வழியனுப்பினார்.

அடாடா! என்ன ஆநந்தக் காட்சி. ‘நானு! நீ!’ என்று போட்டியிட்ட வண்ணம், ஒவ்வொருவரும் ஓடோடி வந்து, மாலைகளைச் சூட்டி, டாக்டரை வணங்கியும், தழுவியும் அவரவர்களின் அன்பைக் கொட்டியளந்து, வரவேற்ற காட்சியை வர்ணிக்க முடியவே முடியாது.

ஜெயிலர் தம்மையே மறந்து, ஆனந்தக் கண்ணீர் பெருகச் சிலை போல், நின்று விட்டார்… “அம்மா, தம்பீ!… அருமைத் தங்கச்சி! ஆத்ம நேயர்களே… அன்று நான் முதல், முதல் கைதியாகி, போலீஸாருடன் செல்லும் சமயம், என்ன சொன்னேன், அது நினைவிருக்கிறதா! அதை மறுபடியும் நினைத்துப் பாருங்கள். ஆண்டவனே சத்யம்! சத்யமே ஆண்டவன், அப்படிப் பட்டவன் தன்னுடைய சத்யமும், தானும் உண்மையாயிருந்தால், அதை அவனே நிலை நாட்டி, நான் நிரபராதி என்பதை நிரூபிக்கட்டும்; இல்லையேல், நான் என் விதி என்று எண்ணி அனுபவிக்கிறேன்—என்று உறுதியுடன், நம்பிக்கையுடன் கூறினேன். இப்போது அந்த பரந்தாமன் அதை நிரூபித்துக் காட்டி விட்டான் பார்த்தீர்களா! அந்த மாதிரியாய், ஆழமான நம்பிக்கையும், பக்தியும் என்றென்றும் எல்லோருக்கும் இருந்து விட்டால், அவன் தனது கண்ணின் மணி போல் காத்து ரக்ஷிப்பான்!” என்று கூறியபடியே, முதலில் தன் தாயாரின் காலில் விழுந்து, கால்களில் முகத்தைப் பதித்துக்