உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை மு.கோ. 103-வது நாவல்

254

கொண்டான். இந்த உருக்கமான காட்சி, எல்லோருடைய மனதையும் உருக்கி, அடி பாதாளம் வரையில், ஊடுருவிப் பாய்ந்து, உணர்ச்சி வயமாக்கியது. Script error: No such module "Custom rule".

31

ன்ன ஆச்சரியமப்பா! சென்ற வருஷம், வெறும் பங்களாவாக இருந்த துரைக்கண்ணனின் இடம், இன்று எத்தகைய அத்புத தேஜஸுடன் விளங்குகிறது. “சாந்தியின் சிகராலயம்” என்கிற பெயரைத் தாங்கி, கம்பீரமாய்க் காட்சியளிக்கும் பலகையைப் பார்க்கும் போதே, மனத்தில் ஓர் பேராநந்தமல்லவா உண்டாகிறது! என்ன அன்புப் பணி, எத்தனை ஆர்வம். அந்த இடத்தில் போய்ப் பார்த்தாலல்லவா தெரியும்? நம் பாரத நாட்டின் பண்டைப் பெருமைகள் எல்லாம் செத்து மறைந்து விட்டது, நாசமாகி விட்டது, நாஸ்திகம் தலை எடுத்துத் தாண்டவம் செய்கிறது, நாகரீகம் நிர்த்தனம் செய்கிறது, தெய்வமில்லை, தேவாதி இல்லை—என்றெல்லாம் மனம் குமுறி, இரைச்சலிடும் பக்தர்களும், ஆஸ்திகத்தைக் கேலி செய்து, நங்கு காட்டும் தற்கால விசித்ர மக்களும், அங்கு போய்ப் பார்த்தால், என்ன நிலைமையை அடைவார்கள் தெரியுமா!

அடாடாடா!… ஒரு புறம் பகவன்னாம பஜனை! ஒரு புறம் சத்காலக்ஷேபம், ஒரு புறம் விஞ்ஞான வகுப்பு, ஒரு புறம் சித்திரக் கலை, சிற்பக் கலை, சங்கீதக் கலை, கைத் தொழில் வகுப்பு, இது போல் எத்தனையோ வகுப்புகளும், உபதேசங்களும் நடக்கின்ற அழகைப் பார்த்தால், நான் இந்தப் பாழும் உத்யோகத்தை விட்டு விட்டு, அங்கேயே சதா இருந்து விடலாமா என்றுதான் தோன்றுகிறது.அங்குள்ள ஸ்வாமிகளின் தேஜஸ்ஸும்