49
சாந்தியின் சிகரம்
மையைக் கண்டு தவிக்கிறாள். சொல்லவும் முடியாது, சமாளிக்கவும் முடியாது தத்தளிக்கிறாள். “குடும்பத்தின் கண்ணியம் குலையாதிருப்பதற்காகச் செய்யப் புகுந்த செய்கை இப்படியாகி விட்டதே, இதனால் மகனுக்கு ஒன்றுமில்லாதிருக்க வேண்டுமே!" என்று உள்ளுக்குள் நடுங்குகிறது.
தாமோதரனுக்கு உண்மையில் இதயத்தில் ஒரு பயங்கரமும், நடுக்கலும் உண்டாகி, மவுனத்திலேயே ஆழ்த்தி விட்டது. யாருடனும் பேசவில்லை. ப்ரமை பிடித்தவன் போலவே, படுக்கையில் படுத்தான். அண்ணன் சொல்லும் வார்த்தைகளிலும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், எதிர்த்துப் புறக்கணித்துப் பேசவும் தோன்றவில்லை. சகலமான கதவுகளும் சாத்திப் பூட்டியபடி இருக்கையில், என் படுக்கையருகில் மட்டும் அந்தப் பயங்கரக் கருப்புக் கவசம் போன்ற போர்வையைப் போர்த்த பிசாசு எப்படி வரும்? எதற்காக வரும்? இது வரையில், இந்தப் பக்கத்தில் பிசாசு என்கிற பெயரைக் கூடக் கேட்டதில்லையே. இன்று இதென்ன வேடிக்கையாக இருக்கும்?—என்கிற எண்ணமும், கருப்பு உருவமுமே அவன் மனக் கண்ணில் தோன்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
கமலவேணியம்மாளின் உடல் நிலையின் பயங்கரம் மறந்தே போய், அவள் சாதாரண மனுஷியாகி, தாமோதரனின் பக்கலில் வெகு நேரம் உட்கார்ந்திருந்து, ஏதேதோ தேறுதல்கள் சொல்கிறாளேயன்றி, மனத்திற்குள் சங்கடம் செய்கிறது. தன் செய்கையே அவளைக் குத்திக் காட்டி ஏதோ வருத்துகிறது. “நான்தான் அப்படிச் செய்தேன்” என்று சொல்லி, அவன் பயத்தைத் தீர்த்து விடலாமா?… “இந்த பயத்தின் ப்ராந்தியால், ஏதாவது ஆபத்தாக முடிந்து விடுமோ” என்றும் தோன்றுகிறது. அம்மாதிரி சொல்லி விட்டால், தன் மீது அளவற்ற ஆத்திரமும், த்வேஷமும் உண்டாகி விட்டால், என்ன செய்வது? இதையிப்-
சா4