வை.மு.கோ. 103-வது நாவல்
64
ஒரே வியப்புடன், “என்னது… அப்பாவின் சந்ததிகள் இப்படி வேறு இருக்கிறார்களா! இதை நான் இது வரையில் கேள்விப்பட்டதே இல்லையே… அவர்களா இப்படி கொள்ளைக்காரர்கள் போலும், பேய் பிசாசு போலும் வந்தது அண்ணா ! நீ இம்மாதிரி கழுதைகளுக்கு உதவி செய்வதென்று ஆரம்பித்தால், திவாலாக வேண்டியதுதான்…”
என்று ஆத்திரத்துடன் கூறுவதைத் தடுத்துச் சமாதானம் செய்து… “தம்பீ ! நமது தகப்பனாரின் அட்டூழியச் செய்கையின் பலனால், பாபப்பிண்டங்களாகி நாம் பரிதவிப்பதை விட, ஏதோ கஷ்டப்பட்டு அலையும் ஆத்மாக்களைக் காப்பாற்றினால், புண்ணியமாவது உண்டாகும் என்பதனால்தான் கொடுத்தனுப்பினேன்… அது கிடக்கட்டும் தம்பீ! நீ இனி, இந்த பிசாசு பயத்தை அடியோடு விட்டு விடு. நான் என் தொழில் நிமித்தமாய், மேல் நாடுகளுக்குச் சென்று வரலாம் என்று உத்தேசம்; அது எப்போது நேரிடுமோ, இன்னும் நாள் குறிக்கவில்லை. இதைப் பற்றி அம்மாவிடமும் சொல்லவில்லை. சொன்னால் என்னைப் பிரிவதற்கு வருந்தி, உத்திரவு கொடுக்க மறுப்பாள்; அதனால்தான் சொல்லவில்லை. இந்த அபிப்ராயத்தினால்தான், நான் விவாகம் செய்துக் கொள்ளவில்லை. இந்த காரணங்களையும் நான் அம்மாவிடம் சொல்ல விரும்பவில்லை. நான் முதலில் உனக்கு விவாகத்தைச் செய்து விட்டு, பொறுப்பு பூராவும் உன்னிடம் ஒப்பித்து விட்டு, நான் போகப் போகிறேன். இப்போ இவைகளை எல்லாம் தீர்மானமாய்ப் பேசி, முடிவு கட்டுவதற்குத்தான் வந்தேன். தெரியுமா! உன் விவாக விஷயத்தில், நான் தடையாய் குறுக்கே நிற்பதாயும் அல்லது கவனிப்பதே இல்லை என்றும் நீ எண்ணி இருக்கிறாய்! எனக்கத்தகைய எண்ணம் கனவிலும் இல்லை. உனக்கு விவாகத்தைச் செய்து, அதன் மூலம் நம் தாயாரின் மனம் மகிழ்ந்து, அவளுடைய துக்கத்தை மறந்து, இன்புற்றிருக்கச் செய்ய வேண்டும்.
தம்பீ! நான் பகிரங்கமாய்க் கேட்கிறேன். உனக்காக, அம்மாவைப் பெண் பார்க்கச் சொல்வதா! அன்றி நீயே