உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

80

இச்செய்கையின் உண்மை பளிச்சென்று மனத்தில் தோன்றி, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

குறித்த நேரத்திற்கு எல்லோரும் மங்களகரமான தாம்பூல சகிதம் கிளம்பினார்கள். உஷா தேவியின் பங்களாவின் முன்புறத்துத் தோட்டத்தின் அழகையும், அதை அலங்கரித்துள்ள அபூர்வ சிங்காரத்தையுங் கண்டு எல்லோரும் ப்ரமித்தார்கள்.

வண்டிகள் வந்து நின்ற உடனேயே உஷா தேவியே, தங்கப் பன்னீர்ச் சொம்பினால், பன்னீரைத் தெளித்துக் கொண்டே, “வர வேணும்! வர வேணும்” என்று தானே வரவேற்புக் கூறினாள். உஷாவின் தாயாரும் வெகு உத்ஸாகத்துடன், தடபுடல் அலங்காரவதியாய் வரவேற்றாள்.

தாமோதரனின் சகோதரிகளாகிய இந்திரா, சந்திரா இருவருக்கும் உள்ள சந்தோஷமும், வரவேற்பைக் கண்டதும் அபாரமான மதிப்பும் சொல்லத் திறமற்று விட்டது. வெகு அடக்கமும், மரியாதையும் உள்ள கமலவேணியம்மாளுக்கு இந்த ப்ரமாத வரவேற்பினால், எத்தகைய அதிசயமோ, ப்ரமிப்போ தோன்றவில்லை. டாக்டர் ஸ்ரீதரனுக்கு இந்த தடபுடல் அட்டகாஸங்களும், வரவேற்பும் ட்ராமாவைப் போல், நாட்டியத்தைப் போல் தோன்றியதேயன்றி, சாதாரண குடும்பத்திற்குள்ள கண்ணியமும், கம்பீரமும் காண்பதாகத் தோன்றவில்லை. பன்னீர் தெளிக்கும் பெண்தான் கல்யாணப் பெண் என்று ஒருவருக்கும் தெரியாதாகையால், அந்தப் பெண்ணின் செய்கைக்கு கமலவேணியும், ஸ்ரீதரனும் ‘சற்றும் அடக்கமற்ற அதீத முறையில் செல்லும் பெண் எவளோ ஒருத்தி’ என்று எண்ணினார்கள்.

இதற்குள், “ஹல்லோ தாமோதரன்”… என்று கை குலுக்கி, தாமோதரனை வரவேற்ற போது, எல்லோருக்கும் சந்தேகம் உண்டாகி, விழித்தார்கள். அதே சமயம் தாமோ-