உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

84

நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்கள் தகப்பனார் எங்கே… ஊரிலில்லையா…

உஷா:- அதைப் பற்றி மட்டும் கேட்காதிருந்தால், மிகவும் சந்தோஷமாக இருப்பேன். வேண்டுமானால், என் தாயாரிடம் தனித்துப் பேசலாம்… என்று கூறி தாயாரிடம் ஜாடை செய்தாள். ஸ்ரீதரன், கமலவேணி, உஷாவின் தாயார் மூவரும் தனி இடத்திலமர்ந்தார்கள்.

கமல:-உங்கள் கணவருக்கு ஏதாவது உத்யோகம் உண்டா அல்லது மிராசுதாரரோ!

சுந்தராம்பாள்:- அம்மணீ! இக்கேள்விக்கு நான் பதில் சொல்ல மிகவும் வருத்தப்படுகிறேன். என் கணவரை நான் பரிபூர்ணமாக நம்பினேன். அவர் என்னைக் கை விட்டு விட்டார்.. டாக்டர் ஸ்ரீதரன் ஏழைப் பங்காளன், சமூக சீர்திருத்தவாதி என்று மருமகப் பிள்ளை அடிக்கடி சொல்வார்கள். இத்தகைய வீரர்களினால்தான், புத்தி கெட்ட ஆண் பிள்ளைகளின் துர்ப்புத்தி மாறி, நல்ல நிலைமை உண்டாக வேண்டும்… ஏதோ போதாக் காலக் கொடுமையினால் எங்கள் மூதாதைகள் தேவதாசி வகுப்பில் பிறந்து விட்டார்கள்…

என்றதைக் கேட்டதும், இருவரையும் தூக்கி வாரிப் போட்டது; தங்களைச் சமாளித்துக் கொண்டு, வெகு ப்ரயத்தனத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். சுந்தராம்பாள் மேலும் பேசத் தொடங்கினாள்.

என் கொள்ளுப்பாட்டி முதல் இந்த வம்சத்தில் பிறந்ததை எண்ணி, வெறுத்து குல மகளைப் போல், கல்யாணம் செய்து கொண்டே சந்ததி வ்ருத்தியானவர்கள். என பாட்டி, என் தாயார், நான், மூவரும் உயர்ந்த குல மகனையே மணந்து கொண்டு ஒழுங்காக இருப்பவர்கள். இதோ! புகைப்படங்கள் பாருங்கள் என்று உள்ளிருந்து