உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

சாந்தியின் சிகரம்

ஒரு புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு காட்டினாள். என்ன ஆச்சரியம்! என்ன அதிர்ச்சியான சம்பவம்! இந்தம்மாளை மணந்துள்ள பேர்வழி வேறு யாருமில்லை. தன் பிதாவே சாக்ஷாத்தாக நிற்பதைக் கண்டு, ஸ்ரீதரன் மின்ஸாரம் தாக்கியது போல், தாக்கி தவிக்கிறான்.

கமலவேணிக்கோ, மூச்சே நின்று விடும் போலாகி விட்டது… ஐயோ! இவர் என் கணவராயிற்றே! அவருக்குள்ள பல லீலைகளில் இதுவும் ஒன்றா… என்று நினைக்கும் போதே, முன்பு வந்தது போன்று, அதிர்ச்சியினால் மயக்கமே உண்டாகி விட்டது. இதைக் கண்ட சுந்தராம்பாளுக்கு ஒன்றும் தெரியாமல் மிரண்டு போய், “என்ன விஷயம்! டாக்டர்? ஏன் அந்தம்மாளுக்கு இப்படியாகி விட்டது? நான் தேவதாசி என்பதனாலா…” என்று பதறியவாறு கேட்டாள்.

ஸ்ரீதர்:- தாயே! சற்று நிதானியுங்கள். என் தாய் அளவற்ற கஷ்டங்களை, வாழ்க்கையில் அனுபவிப்பதற்கே வரம் வாங்கிக் கொண்டு பிறந்துள்ளவர்கள்; இந்த இடத்தில், இத்தகைய சம்பவம் உண்டாகும் என்று நான் கனவில் கூட கருதவில்லை; அவர்களும் அப்படியே. தாங்கள் தேவதாசி என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இதோ! இந்த மனிதர் வேறு யாருமில்லை. எங்களுடைய தகப்பனாராகிய கொடிய மனிதனேயாகும்… என்றதைக் கேட்டு, தன்னை மீறிய அதிர்ச்சியினால், “என்ன! என்ன! இவர் உங்கள் பிதாவா! உஷா உங்கள் சகோதரியா!… உஷாவின் பிதாவா!… இந்த உத்தமியின் வாழ்க்கைச் சக்கரத்தை முறியடித்த பாவி நானா? டாக்டர் ! முதலில் நீங்கள் இந்தம்மாளை வீட்டிற்குக் கொண்டு போய் சிகிச்சை செய்யுங்கள். எனக்கும் இப்போது மயக்கம் வந்து விடும் போல் இருக்கிறது. தனக்கு விவாகமே ஆகவில்லை, லக்ஷாதிபதி, பெரிய உத்யோகஸ்தன்… அப்படி இப்படி என்று சொல்லி, ப்ரமாணம் செய்து, என்னை மணந்து நான்கே வருஷங்கள் என்னுடன் வாழ்க்கை நடத்திய